ஏன் இப்படி நாக்கை தொங்க போட்டுட்டு பதவிக்கு அலையறீங்க.. பாஜக மீது பாய்ந்த கஸ்தூரி!
பாஜகவை விமர்சித்து நடிகை கஸ்தூரி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "எப்படியாவது பதவியை பிடிக்கணும்னு ஏன்தான் இந்த பாஜக இப்படி அலையுதோ.. காங்கிரஸை அதன் போக்கிலேயே விட்டால்தானே அது மக்கள் மத்தியில் அம்பலமாகும்.. அது ஏன் பாஜகவுக்கு தெரியலை" என்று கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
Recommended Video
நடிகையாக மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடனும் இருப்பவர் நடிகை கஸ்தூரி. சமூக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கருத்துக்களை சொல்லத் தவறுவதில்லை. சில நேரம் அது வரவேற்பை பெறும்.. சில நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தும்!
அந்த வகையில் தற்போது வெடித்து கிளம்பியிருக்கும் மத்தியப் பிரதேச அரசியல் குழப்பம் குறித்தும் அவர் காட்டமாக போட்டுத் தாக்கியுள்ளார் தனது டிவிட்டரில்!!

கஸ்தூரி
மத்தியப் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது. ஆனால் இதைப் பொறுக்க முடியாமல் தற்போது அங்கு ஆட்டையைக் கலைக்கும் வேலையை பாஜக தொடங்கி விட்டது. இதனால் நாடு முழுவதும் மக்களின் பார்வை பாஜகவின் ஸ்கெட்ச் பக்கம் திரும்பியுள்ளது. இப்படி செய்யலாமா பாஜக என்ற குரல்களும் வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த குரலாகத்தான் கஸ்தூரியும் ஒலித்துள்ளார்.
|
2 ட்வீட்
மத்தியப் பிரதேசம் குறித்து கஸ்தூரி 2 ட்வீட்களைப் போட்டுள்ளார். ஒரு டிவீட்டில் பாஜகவை வெளுத்து வாங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக 2வது ட்வீட்டைப் போட்டுள்ளார். முதல் ட்வீட்டில் பாஜகவை கடுமையாகவே விமர்சித்துள்ளார். இதுதான் முக்கியமானது. அந்த டிவீட்டைத் தொடர்ந்து போட்டுள்ள 2வது டிவிட்டீலும் பெரும்பாலானவர்களின் ஆதங்கத்தைப் பிரதிபலிதித்துள்ளார் கஸ்தூரி.

பொறுமை
"ஏன் எப்போது பார்த்தாலும் பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றப் பார்க்கிறது? இப்படி பதவிக்காக வாய் பிளந்து நிற்கும் பருந்தாக இருக்காமல், சற்று பொறுமையாக இருந்து, காங்கிரஸ் தானாகவே வெடித்து சிதற விட வேண்டியதுதானே? ஏன் அப்படி செய்யாமல் பதவிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாஜக என்று புரியவில்லை. காங்கிரஸால் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதையும் தனது செயலின் மூலம் காட்ட பாஜக முயற்சிக்கலாமே?" என்று முதல் டிவீட்டில் சொல்லியுள்ளார்.
|
தேன்கூடு
2வது டிவீட்டில், "காங்கிரஸை அப்படியே செயல்பட விட்டால் பாஜகவுக்கு அது நீண்ட கால பலனையே தரும். மக்கள் மத்தியிலும் நல்ல கருத்து உருவாகும். மகாராஷ்டிராவில் கற்றுக் கொண்ட பாடத்தை பாஜக நினைவு கூற வேண்டும். இதுபோல பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்றுவதை நிறுத்த வேண்டும். உங்களது உள்ளூர் தலைவர்கள் எப்படியாவது தலையை தேன் கூட்டுக்குள் விட்டு தேனை எடுக்க வாய்ப்பு தேடுகிறார்கள் பாருங்கள். ரொம்ப மோசம்" என்று கடுமையாக சாடியுள்ளார் கஸ்தூரி.

ஆட்சி சீர்குலைவு
கஸ்தூரி சொல்வதும் உண்மைதான்.. பதவியைப் பிடிக்க ஆட்சியைப் பிடிக்க என்னென்னவோ செய்கிறது பாஜக. பெரும்பான்மை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நம்மிடமே ஆட்சி இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறது பாஜக... மகாராஷ்டிராவில் இப்படித்தான் அது செய்தது. ஆனால் அங்கு மூக்குறுபட்டது... கர்நாடகத்திலும் இதேபோலத்தான் செய்தது. இப்போது நிம்மதியாக போய்க் கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைக்கும் வேலையில் இறங்கி விட்டது. எப்போதுதான் பாஜக பாடம் கற்க போகிறதோ?!!
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications