சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கத்துக்குட்டி".. கஸ்தூரி சொன்ன "அந்த" ஒரு வார்த்தை.. டக்குனு நிமிர்ந்த அண்ணாமலை.. அதிர்ந்த அப்ளாஸ்

நடிகை கஸ்தூரி அண்ணாமலைக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகை கஸ்தூரியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பாஜகவினர் திரண்டு வந்து ஆதரவு தந்துள்ளதுடன், அந்த வீடியோ எக்கச்சக்கமாக ஷேர் செய்தும் வருகின்றனர்.. என்ன காரணம்?
ஒரு நடிகையாக மட்டுமேயல்லாமல், சமூக நலன் கலந்த அக்கறையாய் வலம் வருபவர் கஸ்தூரி.. நிகழ்கால அரசியல்கள் குறித்து உடனுக்குடன் கருத்துக்களை சொல்ல என்றுமே கஸ்தூரி தவறுவதில்லை..

சில நேரம் அவைகள் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.. சில நேரம் அவகைள் மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்திவிடும்.. இதில் எத்தகையை விமர்சனங்களாக இருந்தாலும், அவைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு, ட்விட்டர்வாசிகளுக்கே பதிலடி தந்துவிடுவார் கஸ்தூரி..

பல ஆண்டுகளாக பாடுபடும் அரசியல்வாதிகள்! 30 வினாடிகளில் சாதித்த தீபிகா படுகோன்! பதான் குறித்து கஸ்தூரி பல ஆண்டுகளாக பாடுபடும் அரசியல்வாதிகள்! 30 வினாடிகளில் சாதித்த தீபிகா படுகோன்! பதான் குறித்து கஸ்தூரி

 கெட்ட கெட்ட வார்த்தை

கெட்ட கெட்ட வார்த்தை

இப்படி ட்விட்டரிலேயே அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்களே, நேரடி அரசியலுக்கு எப்போது வரப்போகிறீர்கள் என்று கேட்டால், "ட்விட்டரில் வரும் கெட்ட வார்த்தைகளேயே என்னால் தாங்க முடியவில்லை.. நேரடி அரசியலில் அதைவிடவும் தாக்குதல் இருக்கும். அதை சமாளிக்க எனக்கு அந்த அளவுக்கு சக்தி இல்லை... அரசியலில் செலவு செய்யும் அளவுக்கு என்னிடம் பணமுமில்லை... அரசியல் கட்சியில் சேர்ந்தால் சுதந்திரமாக செயல்படவோ, கருத்து சொல்லவோ முடியாது... ட்விட்டரில் அரசியலில் செய்வதும் கஷ்டம்தான்" என்கிறார்.

 ஆட்டைய கலைச்சாச்சு

ஆட்டைய கலைச்சாச்சு

நான் ஒன்றும் பாஜக ஆதரவாளர் கிடையாது என்று கஸ்தூரி அடிக்கடி சொன்னாலும், அவரது ட்வீட்கள் 2விதமான நிலைப்பாட்டை அடிக்கடி ஏற்படுத்தி விடுகிறது.. 2 வருடத்துக்கு முன்பு, மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசியலில் பெரும்புயல் வீசிக் கொண்டிருந்த நேரமது.. ஆட்டையக் கலைக்கும் வேலையை பாஜக தொடங்கியிருந்தது.. அப்போது கஸ்தூரி 2 ட்வீட்களை அடுத்தடுத்து பதிவிட்டிருந்தார்.. அந்த ட்வீட்கள் அப்போது பெரும் வரவேற்பை தமிழகத்தில் பெற்றிருந்தன.

பருந்துகள்

பருந்துகள்

அதில், "ஏன் எப்போது பார்த்தாலும் பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றப் பார்க்கிறது? இப்படி பதவிக்காக வாய் பிளந்து நிற்கும் பருந்தாக இருக்காமல், சற்று பொறுமையாக இருந்து, காங்கிரஸ் தானாகவே வெடித்து சிதற விட வேண்டியதுதானே? ஏன் அப்படி செய்யாமல் பதவிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாஜக என்று புரியவில்லை. காங்கிரஸால் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதையும் தனது செயலின் மூலம் காட்ட பாஜக முயற்சிக்கலாமே?"

 ரொம்ப மோசம்

ரொம்ப மோசம்

"காங்கிரஸை அப்படியே செயல்பட விட்டால் பாஜகவுக்கு அது நீண்ட கால பலனையே தரும். மக்கள் மத்தியிலும் நல்ல கருத்து உருவாகும். மகாராஷ்டிராவில் கற்றுக் கொண்ட பாடத்தை பாஜக நினைவு கூற வேண்டும். இதுபோல பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்றுவதை நிறுத்த வேண்டும். உங்களது உள்ளூர் தலைவர்கள் எப்படியாவது தலையை தேன் கூட்டுக்குள் விட்டு தேனை எடுக்க வாய்ப்பு தேடுகிறார்கள் பாருங்கள். ரொம்ப மோசம்" என்று கடுமையாக சாடியிருந்தார் கஸ்தூரி.

உவ்வே

உவ்வே

அவ்வளவு ஏன், சமீபத்தில் திருச்சி சூர்யா - டெய்ஸி இருவரும், ஓவர்நைட்டில் அக்கா - தம்பியாகிவிட்ட நேரத்தில், பாஜக பெண்களுக்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை கஸ்தூரி தந்திருந்தார்.. அதில், "என்னது தம்பியா ?! அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. @DaisyThangaiya வுக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே.. இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் ! #உவ்வே" என்று கஸ்தூரி அட்வைஸ் செய்திருந்ததும் இணையத்தில் பரலால் உற்றுநோக்கப்பட்டது.

கத்துக்குட்டி

கத்துக்குட்டி

தற்போது வரை கஸ்தூரியின் நிலைப்பாடு உறுதியாக தெரியாவிட்டாலும், இப்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கஸ்தூரியும் கலந்து கொண்டுள்ளார்.. அந்த விழாவில் கஸ்தூரி பேசியபோது, "ஒரே ஒரு விஷயம் பொதுவாக நான் சொல்ல விரும்புகிறேன்.. தலை குனியலாம், ஆனால், மலை குனியலாமா? கரடியோடுகூட சண்டை போட்டுடலாம்.. ஆனால், கத்துக்குட்டிகளோடு சண்டை போடறதுக்கு ஒரு தலைவர் தேவையா?" என்று கேட்டுள்ளார்..

 மலை தலை

மலை தலை

தமிழக பாஜக தலைவர் கத்துக்குட்டிகளுடன் சண்டை போடக்கூடாது என்று நடிகை கஸ்தூரியின் வேண்டுகோள்தான் வீடியோவாக இணையத்தில் பரவி கொண்டிருக்கிறது.. இதற்கு பாஜகவினர் திரண்டு வந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.. மேலும் சிலரோ, "ஓஹோ, காயத்ரி இடத்துக்கு கஸ்தூரி வரப்போகிறாரா?" என்றும் கிளப்பி விட்டுள்ளனர்.. ஆக மொத்தம், இந்த வீடியோதான் இப்போதைக்கு சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி ஓடிக்கொண்டிருக்கிறது...!!

கரடி நரி

கரடி நரி

பாஜக சார்பில் நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது... விழாவில் தமிழ்சார்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரையும் கொண்டு வந்து மேடையில் அண்ணாமலை உலா விட்டது, பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. விழாவில் பேசியபோது, கரடி, நரிகளை வைத்து ஒரு குட்டி கதையை சொன்னார் கஸ்தூரி.. அந்த கதையை சொல்லிவிட்டுத்தான், "கரடியோடுகூட சண்டை போட்டுடலாம்.. ஆனால், கத்துக்குட்டிகளோடு சண்டை போடறதுக்கு ஒரு தலைவர் தேவையா" என்று கேட்டிருந்தார்.. முன்னதாக, ஒரு பார்வையாளராக, அரசியல் ஆர்வலராக, சமூக சிந்தனை உள்ள பெண்ணாக இந்த கருத்தை முன்வைக்கிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் தன்னுடைய பேச்சை தொடங்கினார்.. அதுமட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணாமலை சாரின் பெரிய ரசிகை நான், என்று கஸ்தூரி சொன்னபோதே, அந்த அரங்கமே கைதட்டலால் அதிர்ந்துவிட்டது...!!

English summary
Actress kasturi has advised tamil nadu bjp leader Annamalai and says about Oppositions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X