கே.டி. ராகவன் வீடியோ: எக்கச்சக்கமா பாத்துட்டோம்.. அப்பாவி பெண்களை நினைத்தால்.. நடிகை கஸ்தூரி கவலை
: கேடி ராகவன் வீடியோ குறித்து கஸ்தூரி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: பாஜகவின் கே.டி. ராகவனின் வீடியோ பதிவு வெளியானது குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில பொதுச் செயலாளரும் வக்கீலாகவும் இருந்தவர் கே.டி.ராகவன்... டிவி விவாதங்களிலும் மிக பிரபலமாக உள்ளவர்.
இவர் தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு இளம்பெண்ணை வீடியோ காலில் அழைத்ததாகவும் அப்போது சட்டை இல்லாமல் ராகவன் பேசியதாகவும், அந்த நேரத்தில் பாலியல் ரீதியில் பல சேட்டைகளை ராகவன் செய்ததாகவும் பகீர் புகார்கள் எழுந்தன. வீடியோ வெளியாகி, கொஞ்ச நேரத்திலேயே ராகவன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்..

ராஜினாமா
"தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்... என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்.. நான் 30 வருஷமாக எந்த ஒரு பிரதி பலனுமின்றி பணியாற்றி வருகிறேன்.. சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்... என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்" என்று பதிவிட்டிருந்தார்.

நடவடிக்கை
இதனிடையே, இந்த வீடியோவை வெளியிட்டவர் பத்திரிகையாளர் என கூறிக்கொள்ளும் மதன் ரவிச்சந்திரன், இதுபோல் ராகவன் யார் யாரிடம் நடந்து கொண்டார், அந்த பெண்களை கட்டாயப்படுத்தினாரா என்பது குறித்தெல்லாம் கண்டறிந்ததாக கூறியிருந்தார்.. மேலும் பொறி வைத்து பிடிக்கும் நடவடிக்கையில் ஆதாரங்களை திரட்ட கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகின என்றும் சொன்னார்.

விசாரணை
கே.டி.ராகவன் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு முன்னர் மாநில தலைவர் அண்ணாமலையிடம் அனுமதி கேட்டதாக மதன் தெரிவித்திருந்தார்.. இதுகுறித்து விசாரணைக் குழு அமைத்து வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.. இதைதவிர, ஏராளமான கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ராகவன் வீடியோ குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video

கஸ்தூரி
அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "இத்தனை நாளு ஒரு TV debate கூட முழுசா பாக்கல.. இன்னிக்கு சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம்! தம்பதி சமேதரா ஒரு interview இப்போ வைரல்... அதுக்கு கமெண்ட்ஸ் தெரிச்சுக்கிட்டு இருக்கு. .. இந்த கண்ராவியில் சிக்கி பொதுவெளியில் விவாதிக்கப்படும் அப்பாவி பெண்களை நினைத்தால்... 😢" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications