கிரண்பேடி நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுபுட்டாங்க.. மானத்தை கப்பல் ஏத்திட்டாங்க.. கஸ்தூரி ட்வீட்
கிரண்பேடியின் கருத்து குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "கிரண்பேடி ஒட்டுமொத்தமா தமிழர்களை பழி சொல்லக்கூடாது. எவ்வளோ கஷ்டத்துலையும் மனிதாபிமானத்தை விட்டு கொடுக்காத மக்களைத்தான் நான் நெறைய பாத்துருக்கேன். நம்ம சகிப்புத் தன்மையை சுயநலம்னும், பொறுமையை பலவீனம்னும் தவறா மதிப்பிட்டுருக்காங்கன்னு தோணுது" என்று கஸ்தூரி போட்ட ட்வீட் நெட்டிசன்களிடையே சபாஷ் வாங்கி வருகிறது.
பொழுது விடிஞ்சு, பொழுது போனால், நாராயணசாமிக்கிட்டயே வம்பிழுத்து மல்லுக்கட்டி வரும் கிரண்பேடி, நேற்று திடீரென தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்தார்.
"மோசமான அரசின் செயல்பாடு, ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடு துணிவற்ற மக்கள். அவர்களின் கோழைத்தனமும் சுயநலமும் தான் தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம்'' என்று ஒரு ட்வீட் போட்டார்.

கேள்வி எழுப்பினர்
இதற்கு சட்டசபையில் அமைச்சர் தரப்பு பதில் சொன்னாலும், முக ஸ்டாலின் டென்ஷன் வெளிநடப்பு செய்யும் அளவுக்கு கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார். திமுக, அதிமுக என பாகுபாடு இல்லாமல் கிழித்து தொங்க விட்ட, கிரண்பேடி சரியாகதானே சொல்கிறார் என்று ஒரு சாரார் விமர்சித்தாலும், இதை ஏன் கிரண்பேடி சொல்கிறார் என்பதும், இங்கிருப்பதை விமர்சிக்க இவருக்கு என்ன உரிமை உள்ளது என்றும் மறுசாரார் கேள்வி எழுப்பினர்.
|
ட்வீட்
இதைதான் நடிகை கஸ்தூரியும் கேட்டுள்ளார். சில சமயம் ஏடாகூடமாக ட்வீட் போடும் கஸ்தூரி, இந்த விஷயத்தில் சரியாக ஆராய்ந்து கருத்து தெரிவித்துள்ளர். தனது ஃபேஸ்புக், ட்வீட்டில் பதிவிட்ட கருத்து இதுதான்:

பொய்யுமில்லை
"கிரண்பேடி நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுபுட்டாங்க.. அவங்க சொன்னது புதுசுமில்லை, பொய்யுமில்லை. நாம நமக்குள்ள தினமும் புலம்புறதுதான். உண்மையை போட்டு உடைச்சிட்டாங்களென்ற கோவத்தைவிட உள்ளூர் மானத்தை ஊரான் கப்பல்ல ஏத்திட்டாங்கன்ற அவமானம்தான் இப்போ எல்லாருக்கும்.

மனிதாபிமானம்
ஆனா ஒண்ணு, சுயநலமிக்க, சக்தியில்லாத மக்கள்னு ஒட்டுமொத்தமா தமிழர்களை சொல்லக்கூடாது. ஒருவேளை அவங்களுக்கு தெரிஞ்ச தமிழ் ஆளுங்க அப்பிடித்தான் போலருக்கு. எவ்வளவோ கஷ்டத்துலையும் மனிதாபிமானத்தை விட்டு கொடுக்காத மக்களைத்தான் நான் நெறைய பாத்துருக்கேன்.

பயமில்லை.. பண்பு
நரி வலம் போனா என்ன, இடம் போனா என்ன, நமக்கெதுக்கு வம்புன்னு காலம் காலமா கண்ணை மூடிக்கிட்டு இருக்கிற நம்ம பாழாப்போன சகிப்புத்தன்மையை சுயநலம்னும் பொறுமையை பலவீனம்னும் அவங்க தவறா மதிப்பிட்டுருக்காங்கன்னு தோணுது. எதிரிக்குகூட மரியாதை குடுத்து பேசறது தமிழர் நாகரிகம். அதற்கு பெயர் பண்பு; பயமில்லை." என்று பதிவிட்டுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications