அவர்தான் அப்பவே சொன்னாரே.. கேட்டீங்களாய்யா.. விசனப்படும் கஸ்தூரி
Recommended Video
சென்னை: அவர்தான் அப்பவே சொன்னாரேப்பா.. கேட்டீங்களா என்று கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
கஸ்தூரி யாரைச் சொல்கிறார். அவர் சொன்னவர் என்ன சொன்னார்.. வேறென்ன எல்லாம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றித்தான் இந்த டிவீட்.
நேற்றுதான் இந்தியா பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியா போரா என்றுதான் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எப்பவுமே சூடா இருக்கும். நேற்றும் கூட அப்படித்தான்.

உலக கோப்பை
குடிநீர்ப் பிரச்சினை, வறட்சி, மழையின்மை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளையும் மறந்து விட்டு அல்லது ஓரம் கட்டி விட்டு அத்தனை பேரும் கிரிக்கெட்தான் பார்த்தனர். சும்மா சொல்லக் கூடாது, ரோஹித் சர்மாவும், மற்ற இந்திய வீரர்ளும் அதிரடியாக ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டனர்.

இம்ரான்கான்
சரி அதை விடுவோம்.. இப்ப என்ன மேட்டர்னா.. இந்தியா தோற்றதை விட பாகிஸ்தான் தோல்விக்கான முக்கியக் காரணங்கள் படு சூடாக அலசப்படுகின்றன. அதில் முக்கியமானது, அந்த நாட்டு பிரதமரும், பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தவரும், தரமான பவுலராக வலம் வந்தவரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் சொன்னதை, பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் கான் கேட்கவில்லை என்பதுதான் சர்ச்சையாகியுள்ளது.

சறுக்கிவிட்டது
இம்ரான் கான் என்ன அட்வைஸ் கொடுத்திருந்தார் என்றால், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யுங்க என்று கூறியிருந்தார். ஆனால் சர்பிராஸ் கான் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்து விட்டார். அப்பவே முடிவாகி விட்டது தோல்வி. எதிர்பார்த்தது நடக்காமல் சறுக்கி விட்டது பாகிஸ்தான்.
|
கேட்கவில்லை
இதைத்தான் தனது டிவீட்டிலும் கஸ்தூரி கூறியுள்ளார். அவர் கூறுகையில், யாராச்சும் இவர் சொன்னதை கேட்டீங்களா. பாவம் இம்ரான் கான் (சர்பிராஸ் கானை பேட் செய்ய அவர் அறிவுறுத்தியிருந்தார், ஆனால் அவர் செய்யவில்லை) என்று பதிவிட்டுள்ளார். ஒரு பெரிய மனுஷன் ஒரு விஷயத்தை சொன்னா அதை காது கொடுத்து கேட்க வேண்டும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல செயல்பட்டால் இப்படித்தான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications