ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி
மின்தடை குறித்து நடிகை கஸ்தூரி மறுபடியும் ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: "மறுபடியும் கரண்ட் கட் ஆரம்பித்துவிட்டது.. போன வாரம் எங்களுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து கரண்ட் இல்லை... உங்க ஏரியாவில் எப்படி இருக்கு?" என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டு மறுபடியும் செந்தில்பாலாஜியை வம்பிழுத்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் திடீர் மின்வெட்டுக்கு அணில்களும் காரணம் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லியிருந்தது சர்ச்சையையும், விவாதத்தையும் பெரிதும் கிளப்பி இருந்தது..
இதுகுறித்து அப்போது நடிகை கஸ்தூரியும் கருத்து தெரிவித்திருந்தார். அமைச்சரை அணில்பாலாஜி என்ற ஹேஸ்டேக் செய்து குறிப்பிட்டு ஒரு ட்வீட்டும் பதிவிட்டிருந்தார்..

செந்தில்பாலாஜி
அதில், "செல்லூர் ராஜு வின் விஞ்ஞான அறிவுக்கு விசிறியாக இருந்தவரெல்லாம் இப்போ செந்தில் பாலாஜிக்கு மாறிவிட்டார். கள்ளிக்கு பிள்ளை சாக்கு, கரண்ட் கம்பிக்கு அணில் பிள்ளை சாக்கு! அது என்ன அணிலா அணில் கும்ப்ளே வா? ஸ்டம்ப்பை தூக்குற மாதிரி கரண்ட் கம்பியை தாக்குறதுக்கு! அணில் என்ன ராம்குமாரா கரண்ட் கம்பியை கடிக்கறதுக்கு? அணில் என்ன அவாளா? அநியாயமா பழிபோடறதுக்கு? கருப்புச்சட்டை காக்காவை விட்டுட்டு ராமருக்கு உதவிய அணிலை டார்கெட் பண்ணுறாங்க , எவ்வளோ பெரிய (யார்) அரசியல் பாருங்க!,' என்று பதிவிட்டிருந்தார்... கஸ்தூரியின் இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிலடி
இதற்கு பிறகு, பொதுமக்கள் பலருக்கு கரண்ட் பில் அதிகமாக வந்திருப்பதாக ஆங்காங்கே புகார்கள் கிளம்பின.. அப்போது, காங்கிரஸ் பிரமுகரும், மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனுமான ராம சுகந்தன் செந்தில்பாலாஜியிடமும், மின்வாரியத்துறையிடமும் ஒரு சந்தேகம் கேட்டிருந்தார்... அதில், "கடந்த இரண்டு மாதங்களுக்கான மின்சார கட்டண தொகை , குறைந்தபட்சம் இரு மடங்கு உயர்ந்துள்ளது, எவ்வாறு கணக்கீடு செய்யப்பட்டது என்று பொதுமக்கள் அனைவரும் குழம்பி உள்ளார்கள் ! தமிழக அரசு இதனை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்" என்று ட்வீட் போட்டு டவுட் கேட்டிருந்தார்.

ட்வீட்
இந்த ட்வீட்டுக்கும் நடிகை கஸ்தூரி தன் ஆதங்கத்தை கொட்டி இன்னொரு ட்வீட் போட்டார்.. அதில், "நீங்க வேற. மூணு மாசம் பூட்டி வச்சிருந்த ஃபிளாட்டுக்கு 500 rs bill கட்டுனேன் நானு ! #TNEB #" என்று புலம்பியிருந்தார்.. இப்போது கஸ்தூரி மறுபடியும் கரண்ட் விவகாரம் குறித்து ட்வீட் போட்டுள்ளார்..

செந்தில்பாலாஜி
அதில், "மறுபடியும் கரண்ட் கட் ஆரம்பித்துவிட்டது.. போன வாரம் எங்களுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து கரண்ட் இல்லை...சென்னையை சுற்றியிருக்கும், பணக்காரர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள், தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் கரண்ட் கட் பற்றியே யோசிக்காதவர்கள் என்று நினைக்கிறார்கள்.. ஆனாலும் இங்கு கரண்ட் கட் ஆகிறது.. உங்க ஏரியாவில் எப்படி?" என்று கேட்டுள்ளார்.. அத்துடன் மறுபடியும் மின்வாரியத்துக்கும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இந்த ட்வீட்டை டேக் செய்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications