தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்கிறார் நடிகை குஷ்பு… வருகிற 1-ஆம் தேதிக்கு பிறகு சுற்றுப்பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சார பயணத்தை தொடங்க உள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது.

Actress Khushbu collects votes for Congress; Touring from the April 1st

நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை அந்தந்த கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் நடிகை குஷ்பு பெயர் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து, தங்களது பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வருகிற 1ம் தேதிக்கு பிறகு வாக்கு சேகரிக்க உள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் இன்று தான் முடிகிறது. அதை தொடர்ந்து மனுக்கள் பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதனால், தனது சுற்றுப் பயணத்தை ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு தொடங்க உள்ளதாக நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+