சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண் போலீசுக்கே கத்தி குத்து! முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு தோல்வி! குஷ்புவுக்கு வந்த கோபம்..என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை : போலீசுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சி சம்பவத்தை குறிப்பிட்ட பாஜக தலைவரான குஷ்பு இந்த பரபரப்பு புகாரினை முன் வைத்திருக்கிறார்.

கடந்த 23ஆம் தேதி இரவு நேரத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு சென்றது.

பில்கிஸ் பானு வன்கொடுமை..குற்றவாளிகள் விடுதலை..அரசியலுக்கு அப்பாற்பட்டு யோசியுங்கள்..குஷ்பு பில்கிஸ் பானு வன்கொடுமை..குற்றவாளிகள் விடுதலை..அரசியலுக்கு அப்பாற்பட்டு யோசியுங்கள்..குஷ்பு

பெண் காவலர்

பெண் காவலர்

அப்போது அந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் குடிபோதையில் மர்ம நபர் ஒருவர் ஏறியுள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஆசீர்வா குடிபோதையில் இருந்த நபரை ரயில் பெட்டியில் இருந்து கீழே இறங்குமாறு கூறியிருக்கிறார்.

கத்திக் குத்து

கத்திக் குத்து

தலைக்கேறிய போதையில் அரை மயக்கத்தில் இருந்த அந்த ஆசாமி பெண் காவலரின் பேச்சால் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஆசீர்வா உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ரயிலில் இருந்து இறங்கி அங்கிருந்து ஓடி உயிர் பிழைத்தார்.

குஷ்பு பாஜக

குஷ்பு பாஜக

அவர் ஓடிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. ரயில் நிலையத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முதல்வர் ஸ்டாலின் அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு பெண் போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. போலீசுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது." என பதிவிட்டுள்ளார்.

English summary
Actress and BJP member Khushbu has angrily questioned that there is an unsafe situation for women in Tamil Nadu ; தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X