நாய் வாலை நிமிர்த்த முடியாது.. சீனுக்குள் வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி..! ராதிகாவுக்கு ஆதரவாய் குஷ்பூ
சென்னை : சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சரத்குமாரை விமர்சனம் செய்து பேசி இருந்ததற்கு ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் நாய் வாலை நிமிர்த்த முடியாது என எக்ஸில் பதிவிட்டுள்ளார் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு.
பரபரப்பு, ஆபாச பேச்சுகளால் சற்று பிரபலமான திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்திருக்கிறார். ஏற்கனவே பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு உள்ளிட்டோர் குறித்து பேசி சிறைக்கு சென்ற அவர் தற்போது ராதிகா சரத்குமார் பேச் பற்றிய பேச்சால் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார்.

ஆளுநர் ரவி பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து திமுக மேடைகளில் அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் கண்டனங்களை பெற்று தந்தது. இதையடுத்தே கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி: திமுக பேச்சாளராக இருந்த அவர் மேடைப் பேச்சுகளின் போது மிகவும் ஆபாசமாக பேசுவதையும் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கும் வழக்கத்தை கொண்டவர். மேலும் பெண் தலைவர்களை பற்றி பேசும்போது கடுமையாகவும் ஆபாசமான கருத்துக்களை கொண்டும் விமர்சித்து வந்தார். இதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் புகார் கொடுத்தனர்.
சிறைவாசம்: விவகாரம் பெரிதானதை அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 60 நாள் சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் வெளிவந்த அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தான் பேசியது தவறு என வருத்தம் தெரிவித்ததோடு மீண்டும் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டார்.
மீண்டும் சர்ச்சை: இந்த நிலையில் மீண்டும் சர்ச்சை வளையத்தில் வந்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இரண்டு மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் கூறியதை வைத்து ஆபாசமாகவும் கொச்சையாகவும் சில கருத்துக்களை பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது ட்விட்டரிலும் கடும் கண்டனங்கள் எழுந்து நிலையில் அதனை ராதிகா சரத்குமார் போஸ்ட் செய்து கடுமையாக விமர்சித்து இருந்தார்.
ராதிகா சரத்குமார்: அதில்,"ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on திமுக" என பதிவிட்டு இருந்ததோடு, அதில் திமுக தலைவரும்முதலமைச்சருமான முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்திருந்தார்.
நடிகை குஷ்பு: இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ ஆதரவாக பேசியுள்ளார். ராதிகாவின் எக்ஸ் பதிவை பகிர்ந்துள்ள அவர்," நாய் வாலை நிமிர்த்த முடியாது என ஒரு பழமொழி உண்டு.. ஒவ்வொரு முறையும் இந்த மனிதன் தன்னை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த பெண்ணை அவமதிக்கிறார். அவருடைய வீட்டில் பெண்களின் அவல நிலையை கற்பனை செய்து பாருங்கள்." என கூறியுள்ளார். குஷ்பு குறித்து பேசியதால் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு சிறை சென்றது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications