ஸ்டாலினுக்கு நன்றி! ஆனால் விடமாட்டேன்! சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கினாலும் திமுகவை விளாசிய குஷ்பு
சென்னை: பாஜகவில் செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய நிலையில் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு, எச்சரிக்கை ஒன்றையும் விடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
திமுக பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் சர்ச்சையாக பேசுவதையும், மேடைகளில் அநாகரீகமாக பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மேடையில் பாஜகவில் இருக்கும் நடிகைகள் பற்றியும், ஆளுநர் ஆர்என் ரவி பற்றியும் சர்ச்சையாக பேசினார்.

இதையடுத்து அவரை திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது. அதன்பிறகு மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுக கட்சியில் சேர்த்து கொண்டது. இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியது. சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கிடையே தான் இன்று பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவை அவர் மிகவும் காட்டமாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக நடிகை குஷ்பு கூறியதாவது: ‛‛பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கருணாநிதி இருந்தபோது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதையும் நான்கு பேர் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இதை சொல்வதால் நாளைக்கு என் வீட்டின் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினாலும் அதுபற்றி எனக்கு கவலை கிடையாது.

பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம். யாரை நம்பியும் நான் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால் தான் இவர்களுக்கு புத்தி வரும். இன்று இருக்கும் திமுகவில் இப்படிப்பட்ட ஆட்களைத்தான் தீனி போட்டு வளர்க்கிறார்கள். நாளை இது தொடர்பாக புகாரளிக்க இருக்கிறேன்'' என ஆக்ரோஷமாக பேசி கண்கலங்கினார்.
இதையடுத்து அடுத்த அரை மணிநேரத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார். குஷ்பு பிரஸ்மீட் எதிரொலியாக திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளது. திமுகவில் இருந்து நீக்கியது பற்றி குஷ்புவிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கி இருப்பது சந்தோஷம். ஆனால் இதுபோல் பலர் அந்த கட்சியில் உள்ளனர். கட்சி ரீதியாக அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண் என்ற முறையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை நான் எடுப்பேன். கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார் என்பதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடர மாட்டேன். தேசிய மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என நினைக்காதீர்கள். அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமோ அதனை கண்டிப்பாக செய்வேன்'' என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் பிரஸ்மீட் வைத்த அரை மணிநேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முதல்வரின் கவனத்துக்கு சென்று இருக்குமா?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு குஷ்பு, ‛‛நிச்சயமாக முதல்வரின் கவனத்துக்கு சென்று இருக்கும். அதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் இதோடு நடத்தக்கூடாது. தொடர்ந்து இதுபோல் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை நிரந்தரமாக நீக்காமல் இருந்தால் கட்சிக்கு தான் அவப்பெயர் ஏற்பட்டு இருக்கும். கேவலமான பெயர்கள் வரும்.
ஆனாலும் நான் விடமாட்டேன். நான் எடுக்க வேண்டிய நடவடிக்கையை நிச்சயம் எடுப்பேன். இருப்பினும் பிரஸ்மீட் வைத்தவுடன் அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு நன்றி. ஆனாலும் முதல்வரை கட்சி ரீதியாக எதிர்ப்பேன். பல ஆயிரம் கேள்விகளை எழுப்புவேன். அதேவேளையில் முதல்வர் என்ற முறையில் நான் அவருக்கு நிச்சயம் மரியாதை கொடுப்பேன். பிற மாநிலங்களில் இருந்து முதல்வரை யாராவது தவறாக பேசினால் நான் சண்டையும் போடுவேன். கட்சியில் இருந்து ஒருவர் இப்படி பேசிய பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் எனக்கு கோபம் வரும். மனகஷ்டம் வரும். அந்த நபர் வேண்டும் என்றே தெரிஞ்சு தான் பேசியுள்ளார். அவரையெல்லாம் முட்டிக்கு முட்டி தட்டணும்'' என்றார்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications