தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு
சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். அவர் இந்த பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார்.
நடிகை குஷ்பு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். 1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கென ரசிகர்கள் கோயில் கட்டிய கதையெல்லாம் நம் தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர், தயாரிப்பாளர் உள்பட பன்முகங்களை கொண்ட குஷ்பு, அரசியலிலும் இணைந்தார்.
திமுகவில் கடந்த 2010 ஆம் ஆண்டு இணைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். இதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு திமுகவில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் அவருடைய குடும்பம் காங்கிரஸ் குடும்பம் என்பதால் அக்கட்சியில் 2014 ஆம் ஆண்டு இணைந்தார்.

சட்டசபை தேர்தல்
பின்னர் 2016, 2019 ஆம் ஆண்டு சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்திருந்தார். அந்த சமயத்தில் பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். ட்விட்டர், இன்ஸ்டாவை எடுத்தாலே இவரது கண்டனங்கள் இருக்கும். இதையடுத்து காங்கிரஸ் கட்சியுடனும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டு வெளியேறினார்.

பாஜகவில் இணைந்த குஷ்பு
அவர் திமுகவிலேயே திரும்பவும் இணைவார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து சுமார் 3 ஆண்டுகளாக பாஜகவில் உள்ள குஷ்பு 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.

அரசியல் நிலவரம்
தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தேசிய தலைமை கேட்கும் நபர்களில் குஷ்புவும் ஒருவர். இவர் எப்போது டெல்லி சென்றாலும் அங்கு தமிழக அரசியல் களத்தை விவரிப்பார் என தெரிகிறது. தொடர்ந்து எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்பார். அது போல் பாஜக ஆளும் மாநிலத்தில் தவறுகள் நடந்தாலும் தட்டி கேட்பார். அந்த வகையில் பாஜக ஆளும் குஜராத்தில் பில்கிஸ் பானு வன்கொடுமை குற்றவாளிகள் விடுதலையான போது பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் விடுவிக்கப்படக் கூடாது என தனது ட்விட்டரில் குஷ்பு தெரிவித்திருந்தார்.

சொந்த கட்சி
சொந்த கட்சி என்பதால் கமுக்கமாக இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்த குஷ்புவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அது போல் பெரியார் சிலை உடைப்பு, காவி பூசுதல் என எந்த விஷயம் நடந்தாலும் சரி முதல் ஆளாக ஓடி வந்து குரல் கொடுப்பது குஷ்புதான். இப்படிப்பட்ட குஷ்புவுக்கு இன்று தேசிய அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குஷ்பு கூறுகையில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களுக்கான சுயமரியாதையின்மை ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

பெண் பாதுகாப்பு
அந்த வகையில் தற்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம். திமுக நிர்வாகி சைதை சாதிக் பாஜகவில் உள்ள நான், கவுதமி, நமீதா, காயத்ரி ஆகியோரை பற்றி மிகவும் அவதூறாக பேசியிருந்தார். அவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தேன். அந்த நபர் தேசிய மகளிர் ஆணையத்திலேயே மன்னிப்பு கேட்டார். இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

அண்ணாமலை வாழ்த்து
குஷ்புவுக்கு தமிழக பாஜக அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகள். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிய குஷ்புவுக்கு கிடைத்த அங்கீகாரம் என அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications