பாஜகவில் சேர்ந்துமே மோடியை விமர்சித்த ட்வீட்டை டெலிட் செய்யவில்லை.. "சேரி" பதிவும் நீங்காது- குஷ்பு
சென்னை: நான் பிரதமர் மோடி குறித்து விமர்சித்த ட்வீட்டுகளையே இதுவரை நீக்கவில்லை. சேரி மொழி ட்வீட்டை நான் நீக்க மாட்டேன் என நடிகையும் தேசிய மகளிர் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை குஷ்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் நான் சேரி மொழி என கூறியது பிரெஞ்ச் மொழி அர்த்தத்தில்தான். நான் யாரையும் தவறாக கூறவில்லை. வேளச்சேரி என இருப்பதற்கு என்ன அர்த்தம்.

சேரி என்றால் என்ன என விளக்குங்கள். வேளச்சேரி, செம்மஞ்சேரி என அரசு பதிவேடுகளிலேயே இருக்கிறதே! மணிப்பூர் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என யார் சொன்னது.
அந்த வீடியோ மே மாதம் வந்த போது மீடியா எப்படி பொங்கியதோ அதே போல் நானும் பொங்கினேன். தேசிய மகளிர் ஆணையம் என்பது காவல் துறை அல்ல, யாராவது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள். தாமாக முன் வந்து எடுக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் இதுவரை தேசிய மகளிர் ஆணையம் குறித்து பேசியதே இல்லை. ஆனால் நான் உறுப்பினராக சேர்ந்த பிறகுதான் இப்படி பேசுகிறீர்கள். நடிகை த்ரிஷா விவகாரத்தில் அவர் சார்பாக எங்களுக்கு புகார் வந்தது, அதனால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். த்ரிஷாதான் புகார் கொடுக்க வேண்டும் என்றில்லை.
யார் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்போம். சேரி மொழி ட்வீட்டை நான் எதற்காக டெலிட் செய்ய வேண்டும். இத்தனை நாளாக எந்த ட்வீட்டையாவது நான் டெலிட் செய்திருக்கேனா? நான் காங்கிரஸில் இருந்த போது பிரதமர் மோடியை விமர்சித்து எத்தனை ட்வீட்டுகளை போட்டிருந்தேன். அதையெல்லாம் பாஜகவுக்கு வந்த போது கூட நான் டெலிட் செய்யவில்லை.
அப்படியிருக்கும் போது நான் தவறாக பேசாத ஒரு ட்வீட்டை நான் ஏன் டெலிட் செய்ய வேண்டும். ஒரு முறை பதிவு செய்தால் பதிவு செய்ததுதான். இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு?












Click it and Unblock the Notifications