ஜெயலலிதாவுக்கு முன்பே அதிமுகவில் இணைந்த நடிகை லதா! அமைச்சராக வேண்டியவர்! யார் இவர்?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன்பே நடிகை லதா, அதிமுகவில் சேர்ந்தது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். இவர் நீண்ட காலம் கழித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். யார் இந்த லதா?
ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் லதா. இவரது தந்தை ராமனாதபுரத்து ராஜா ராஜேந்திர சண்முக சேதுபதி ஆவார். இவர் ராஜாஜி அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தவர்.

ஒரு நிகழ்ச்சியில் லதாவின் நாட்டியத்தை பார்த்த ஆர்.எஸ்.மனோகரன்தான் அவரை எம்ஜிஆரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். ஜெயலலிதா எம்ஜிஆருடன் சேர்ந்து நடித்த போது எம்ஜிஆர் திமுகவில் இருந்ததால் படங்களில் திமுகவின் வளர்ச்சிக்கான வசனங்களை பாட்டாக பாடி நடித்திருந்தார்.
ஆனால் லதா மட்டும்தான் அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடி நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட போது புதுக்கட்சியான அதிமுகவை தொடங்கினார். அப்போது எம்ஜிஆர் நடிக்கும் படங்களில் திமுகவை விமர்சிக்கும் வகையிலான வசனங்கள் இடம்பெற்றிருந்தன.
அதிமுக தொடங்கிய பிறகு எம்ஜிஆர் படங்களில் லதா பேசும் ஒவ்வொரு வசனமும் தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் பேச வேண்டிய வீர வசனமாகவே அமைந்தது. இந்த வசனங்கள் பெண்கள் மத்தியில் அதிமுக ஆதரவு பெருக மிகவும் பங்களித்தனர்.
அதிமுகவில் பெண் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட போது ஜானகி அம்மாள், சத்தியவாணிக்கு பிறகு 3ஆவது உறுப்பினராக லதா சேர்க்கப்பட்டார். லதாவை ஒரு தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைக்க எம்ஜிஆர் விரும்பினார். லதா மட்டும் ஓகே சொல்லியிருந்தால் அவருக்கு எம்ஜிஆர் அமைச்சரவையிலும் இடம் கிடைத்திருக்கும்.
லதா, எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக உருவாகியிருப்பார். பின்னாளில் முதல்வராகும் வாய்ப்பு கூட கிடைத்திருக்கும். ஆனால் லதா பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவர் அரசியல் வேண்டாம் என மறுத்துவிட்டார்.
ஆனால் அதிமுக வளர்ச்சிக்காக எம்ஜிஆர், லதாவை சகுந்தலை நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி ரூ 35 லட்சம் நிதியை திரட்டினார். அது முதல் அதிமுகவின் முக்கிய நிகழ்வுகளில் லதாவின் நாட்டிய நிகழ்ச்சி இடம் பெறச் செய்தார்.
வெளிநாட்டு பயணங்களின் போது எம்ஜிஆர் கட்சிக் கொள்கையை தமிழில் சொல்லும் போது அதை ஆங்கிலத்தில் லதாதான் மொழிபெயர்த்து சொல்வார். எம்ஜிஆர் இறந்தபிறகு, ஜெயலலிதா சிலரை கட்சியை விட்டு வெளியேற்றிய போது திருநாவுக்கரசர் எம்ஜிஆர் அதிமுக என்ற ஒரு கட்சியை தொடங்கினார்.
அதில் லதாவை முக்கியஸ்தராக இணைத்துக் கொண்டார். அன்று முதல் லதா நேரடி அரசியலில் ஈடுபட்டார். இதையடுத்து திருநாவுக்கரசர் அந்த கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தாய்க் கட்சியில் இணைந்தார். பிறகு பாஜகவுக்கு சென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் லதா மாறாமல் இருந்தார். இப்படிப்பட்ட லதா தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அவரது பிரச்சாரம் அனல் பறக்கும் என தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications