"வெல்கம்" மீனா.. ரணங்களின் வலிகள்.. பிசைந்தெடுத்த துயரம்.. தோழியை ஓடோடி தாங்கிய நடிகைகள்.. நெகிழ்ச்சி
நடிகை மீனாவை நேரில் சந்தித்து அவரது தோழிகள் ஆறுதல் சொல்லி உள்ளனர்
சென்னை: நடிகை மீனாவின் துக்கத்திலும், துயரத்திலும், ஓடோடி சென்று மீண்டும் பங்கெடுத்து கொண்டுள்ளனர் அவரது தோழிகள்.. முதல்முறையாக அவர்களுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் மீனா.
மீனாவின் வளர்ச்சியை, இந்த தமிழகம் குழந்தையில் இருந்தே பார்த்து வருகிறது.. அதனால்தான் நடிகை என்பதையும் தாண்டி, மக்களின் மனதில் நெருங்கியே உள்ளார் மீனா..
யாரும் எதிர்பாராதவிதமாக, நுரையீரல் பிரச்சனை காரணமாக அவரது கணவர் வித்யாசாகர் மரணம் மீனாவை ஒட்டுமொத்தமாக நிலைகுலைய வைத்துவிட்டது..

நுரையீரல்கள்
இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்தபோது ஏற்பட்ட நோய் என்கிறார்கள்.. அது மட்டுமில்லாமல், ஏற்கனவே இந்த பாதிப்பு இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றும் கூடுதலாக சேர்ந்துவிடவும், உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.. கணவரின் மறைவு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி சோகத்தை ஏற்படுத்திய நிலையில், மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அஸ்தி
அதிலும், இறுதிசடங்கில், தன்னுடைய கையில் கணவரின் அஸ்தியை இறுக்கி பிடித்து கொண்டு, கதறி வெடித்த மீனாவை கண்டு அவரது ரசிகர்களும் கண்ணீர் சிந்தினார்கள்.. இப்படிப்பட்ட நிலையிலும், வித்யாசாகர் மரணத்தில் மர்மங்களை வைத்து, புரளிகளை ஊதிவிட்டார்கள் விஷமிகள்.. கணவர் இறந்த 4வது நாளே ஷூட்டிங் வந்துவிட்டார் என்று மனசாட்சியே இல்லாமல், வதந்தியை பரப்பினர்.. தயவு செய்து எனது கணவரின் மரணம் குறித்து தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று மீனாவே உருக்கமாக பதிவிட்டும்கூட, இதயமில்லாதவர்கள் அடங்கவில்லை.

நடிகை மீனா
குழந்தையில் இருந்தே மீனாவை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார் அவரது அம்மா.. இது திரையுலகில் எல்லாருக்குமே தெரிந்த உண்மை. மீனாவை எப்படி வளர்த்தாரோ, அதுபோலவேதான் வித்யாசாகரும் மீனாவை கவனித்து கொண்டு வந்துள்ளார்.. அதனால்தான். கணவரின் மரணத்திலும் சரி, மரணத்துக்கு பிறகும் சரி, பல நாட்களில் இருந்து அவரால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வெளியே வர முடியவில்லை..

கலாமாஸ்டர்
எனினும் அப்போது முதல் இப்போதுவரை அவருக்கு பக்கபலமாக இருந்தவர் கலாமாஸ்டர் என்பதை மறுக்க முடியாது.. எனினும், மீனாவின் சோகத்தில் இருந்து மீட்டு, அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் அவரது நெருங்கிய தோழிகளான, நடிகைகள் ரம்பா, சங்கீதா, ப்ரீத்தா ஹரி ஆகியோரும் இணைந்துள்ளனர்.. இவர்கள் அனைவருமே மீனா வீட்டிற்கு ஓடோடி சென்று, அவரை தாங்கிப்பிடித்து, நம்பிக்கையையும், வலுவான ஆதரவுகளையும் தெரிவித்துள்ளனர்.

சங்கீதா, சங்கவி
அப்போது, முதல்முறையாக தன்னுடைய தோழிகளுடன் மீனா போட்டோவும் எடுத்து கொண்டுள்ளார்... தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ரம்பா, சங்கவி, சங்கீதா, க்ரிஷ் ஆகியோருடன் இணைந்து இருக்கும் போட்டோக்களை மீனாவே பகிர்ந்தும் உள்ளார்.. அதாவது ரம்பா வெளியூர் பயணம் மேற்கொண்டு திரும்பி வந்த நிலையில், இவர்கள் அனைவரும் சேர்ந்து சந்தித்திருக்கலாம் என்கிறார்கள்.. ஆனாலும் மீனா முகத்தில் பழைய தெம்பும், உற்சாகமும் மிஸ்ஸிங் என்றாலும், அவர் இப்படி மீண்டு வருவதே ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெல்கம் மீனா
இதை பார்த்ததுமே ரசிகர்கள், "இழப்பின் வலி, இழந்தவர்களுக்குதான் புரியும் என்றாலும், நீங்க கவலைப்படாதீங்க மீனா.. வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் வழியில் முன்னேறுங்கள்.. மனம் ஆறுதல் கொள்ளுங்கள்.. உங்களுக்காக நாங்கள் எப்போதுமே இருக்கோம்.. எங்கள் கரங்களை இறுக்க பற்றிக் கொள்ளுங்கள் மீனா" என்று தைரியம் சொல்லி வருகிறார்கள்.. உண்மைதானே.. "இழப்பின் வலி என்பது இதயத்தின் வலிமை ஊற்றும்கூட என்பதை நாம் மறுக்க முடியாது.. .. அந்த வகையில், இதயத்தை துளைத்தெடுக்கும் ரணங்களில் இருந்தும், பிசைந்தெடுக்கும் வேதனை வலிகளில் இருந்தும், மெல்ல மெல்ல தன்னை விடுவித்து கொண்டு வருகிறார் நடிகை மீனா.. வெல்கம் பேக் மீனா..!












Click it and Unblock the Notifications