Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் போட்டோக்களை வைத்து மிரட்டுகிறார்.. வீட்டு பணியாளர் மீது நடிகை பார்வதி நாயர் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனது அனைத்து விதமான போட்டோக்களையும் என் அனுமதி இல்லாமல் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறார் என தனது வீட்டில் பணியாற்றிய நபர் மீது நடிகை பார்வதி நாயர் பகீர் புகார் அளித்துள்ளார்.

நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் சமூகவலைதள பக்கங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பார். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை 2 ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் புதுக்கோட்டையை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டிலிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு வாட்ச்கள், 50 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுவிட்டதாக பார்வதி நாயர் குற்றம்சாட்டியுள்ளார்.

20ஆம் தேதி புதார்

20ஆம் தேதி புதார்

இவரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கு தொடர்பாக வேகமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் இன்னொரு புகாரையும் தெரிவித்துள்ளார்.

விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு

விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு

இந்த புகாரை கொடுத்ததும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எனது வீட்டில் கடந்த மாதம் 15 ஆம் தேதி விலையுயர்ந்த பொருட்கள் திருடுபோயுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக 20 ஆம் தேதி நான் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இளங்கோ, சுபாஷ் சந்திரபோஸ், விஜய், அமல் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

4 பேர் மீது வழக்கு

4 பேர் மீது வழக்கு

ஆனால் அந்த 4 பேரில் சுபாஷ் என் மீது தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறார். தனிப்பட்ட முறையில் என்னை மிரட்டுகிறார். மேலும் சுபாஷ் என் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க விசாரணைக்கு மற்றவர்களை போல் ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி வழங்கவில்லை. என்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்.

யூடியூப் வீடியோ

யூடியூப் வீடியோ

தொடர்ந்து யூடியூப் மூலம் வீடியோ வெளியிட்டு வருகிறார். என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். நான் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்துள்ளேன். ஆனால் எனது சினிமா வளர்ச்சியை தடுக்கும் வகையில் சுபாஷ் சந்திரபோஸ் தொடர்ந்து சதி செய்கிறார். இதை இவர் மட்டும் தனியாளாக செய்யவில்லை. இவர் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்.

போட்டோக்கள்

போட்டோக்கள்

என்னுடைய அனைத்து போட்டோக்களையும் எனது அனுமதி இல்லாமல் சுபாஷ் எடுத்துள்ளார். அவர் ஒரு சைக்கோ. அவர் என் வீட்டு வேலைக்காரர் மட்டும்தான். என் உறவினர் கிடையாது. எனது அப்பா, அம்மா துபாயில் இருக்கிறார்கள். நானும் அங்குதான் வளர்ந்தேன். என் அண்ணனுடன் சென்னையில் வசித்து வந்தேன். அவர் தற்போது மும்பைக்கு போய்விட்டார். அதனால் நான் தனியாக வசித்து வருகிறேன். என் வீட்டிற்கு ஆண் நண்பர்கள் வந்தார்கள் என சுபாஷ் சொல்வதெல்லாம் பொய்.

தப்பு செய்தார்

தப்பு செய்தார்

இவர் தப்பு செய்கிறார் என்றுதான் வேலையை விட்டு நீக்கினேன். ஆனால் என்னிடம் கெஞ்சினார். அதனால் பரிதாபப்பட்டு மன்னித்து அவரை மீண்டும் வேலைக்கு சேர்த்தேன். இதுதான் நான் செய்த தவறு என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். முன்னதாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுபாஷ் ஒரு பரபரப்பு புகாரை கூறியுள்ளார். அதில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் நான் பணிபுரிந்து வந்தேன். என்னை அவர் அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார். வேண்டுமென்றே என் மீது திருட்டு பட்டம் கட்டியுள்ளார். அவர் வீட்டிற்கு நிறைய ஆண் நண்பர்கள் வருவார்கள் என சுபாஷ் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+