தீரன் அதிகாரம் ஒன்றில் நடித்த நடிகை பிரவீனா பாஜகவில் இணைகிறாரா?
சென்னை: நடிகை பிரவீனா பாஜகவில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகின.
தற்போது அண்மைக்காலமாக நடிகர், நடிகைகள் ஏராளமானோர் தங்களுக்கு பிடித்த கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார்.
அது போல் காயத்ரி ரகுராம், ஜெயலட்சுமி, நமீதா உள்ளிட்டோர் பாஜகவிலும் நடிகை குத்து ரம்யா, நக்மா உள்ளிட்டோர் காங்கிரஸிலும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அவரவர் செல்வாக்கிற்கு ஏற்ப அரசியலில் பதவிகள் வழங்கப்படுகின்றன.

சீரியல்
இந்த நிலையில் தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று, சசிகுமாரின் வெற்றிவேல், விக்ரமுடன் சாமி 2, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பிரவீனா. இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியல்களில் நடித்து வருகிறார்.

சிந்தனை
இவர் பாஜகவில் இணைய போவதாக ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது என்னை அரசியலில் இழுத்துவிட்ட அந்த முகம் தெரியாத நபருக்கு நன்றி. எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்ற சிந்தனையும் எனக்கு இல்லை.

பிரவீனா
அரசியலுக்கு வர போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று கூறிவிட்டார். அவர் வரும் சட்டசபை தேர்தலில் கொல்லம் அல்லது திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு சீட் கேட்டதாகவும் சொல்லப்பட்டது. அந்த தகவலையும் பிரவீனா மறுத்துள்ளார்.

வருத்தம்
அரசியலுக்கு வரும் செய்தியே உண்மை இல்லை. பிறகு சீட் கேட்டது மட்டும் எப்படி உண்மையாக இருக்கும் என கூறுகிறாராம். இதனால் பிரவீனா ரசிகர்கள் மன வருத்தத்தில் இருக்கின்றனராம். அவர் முழுக்க முழுக்க தனது குடும்பத்திலும் சினிமா, சீரியல் வாய்ப்புகளிலுமே கவனம் செலுத்த போவதாக தெரிவித்துவிட்டார்.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்












Click it and Unblock the Notifications