முஸ்லீம் கணவர்.. என் குழந்தைகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஆவாங்கனு சொன்னாங்க! கண்ணீர் வடித்த பிரியாமணி!
சென்னை: தமிழ் திரையுலகம் மட்டுமல்ல அது பாலிவுட் வரை சென்று பிரபலமானவர் நடிகை பிரியாமணி. இந்த நிலையில் தனது திருமண வாழ்க்கையை குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக இஸ்லாமியரை திருமணம் செய்ததால் லவ் ஜிகாத் எனவும், தனது குழந்தைகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஆவார்கள் என மத தாக்குதலுக்கு ஆளானதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகையாக கொடிகட்டி பறந்தவர் பிரியாமணி. கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான அவர், அடுத்ததாக தனுசுடன் அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்தார்.

ஆனாலும் 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த பருத்திவீரன் படம் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது. மேலும் பல விருதுகளையும் அவருக்கு பெற்று கொடுத்தது. தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இடையில் போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கஸ்டடி, ஜவான் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கொடிகட்டி பறந்த அவர் தற்போது பாலிவுட் வரை சென்றிருக்கிறார். தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜயின் ஜனநாயகன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரியாமணி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை பிரியாமணி 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்து மதத்தைச் சேர்ந்த பிரியாமணி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பெற்றது. தொடர்ந்து சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் லவ் ஜிகாத் என அந்த திருமணத்தை விமர்சித்தனர். அதற்குப் பிறகுதான் பிரியாமணி பொதுவெளியில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்தார். அதற்கு பிறகு கஸ்டடி ஜவான் படங்களுக்கு பிறகு திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்திருக்கிறார்.
இந்த நிலையில் தனது கடந்த கால நினைவுகள், திருமணம் குறித்த சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் பிரியாமணி. "எனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது அது என் மீது அக்கறை கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக இருக்கும் என்றுதான் அறிவித்தேன். ஆனால் அதற்கு மாறாக என் மீது குற்றச்சாட்டுகள் வந்தது. எனது கணவரையும் என்னையும் வைத்து லவ் ஜிகாத் நடப்பதாக கூறிய கருத்துக்கள் என்னை காயப்படுத்தியது.
ஒரு படி மேலே போய் எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாக மாறுவார்கள் என்று சொன்னார்கள். அதைவிட பெரிய வலி என்ன இருக்கப் போகிறது. திரை துறையில் பிரபலமாக இருப்பதால் விமர்சனங்கள் வரும் என்பது எனக்கு தெரியும். ஆனால் என்னைப் பற்றி மட்டுமல்லாது என் கணவரை பற்றி மட்டுமல்லாது எனது குழந்தைகள் குறித்தும் அவர்கள் பேசியது காயத்தை ஏற்படுத்தியது. சினிமா துறையில் இருப்பதால் என்னைப் பற்றி என்ன வேண்டாலும் சொல்லலாம். எனது கணவரையும் குழந்தைகளை பற்றியும் ஏன் பேச வேண்டும்.
இது போன்ற கருத்துக்களால் பல நாட்கள் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனது கணவருடன் ஒரு புகைப்படம் வெளியிட்டால் கூட அதில் மதம் சாதி பற்றிய கருத்துக்கள் இருந்தது. ஆனால் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி பிரச்சனையை பெரிதாக்க நான் விரும்பவில்லை. என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என் கண்ணை கையைப் பிடித்துக் கொள் எனது என எனது கணவர் எனக்கு துணையாக இருந்தார்.
புயலாக இருந்தாலும் வெயிலாக இருந்தாலும் நாங்கள் அதனை ஒன்றாகவே சந்திப்போம் என எனது கணவர் உடன் இருந்தார். ஆனால் எனக்கு இன்னும் ஒரே ஒரு சந்தேகம் தான் என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஏன் என் மீது இவ்வளவு வெறுப்பை கொட்டினார்கள் என்று தெரியவில்லை. இப்போதும் எனது கணவருடன் புகைப்படத்தை பகிர்ந்தால் அதில் பத்து கமெண்டுகள் மதத்தை பற்றியே இருக்கிறது" என கூறியுள்ளார்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications