நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற விழா மேடை மொத்தமாக சரிந்து விழுந்தது.. அதிர்ந்து போன ரசிகர்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தோரூரில் வணிக வளாக தொடக்க விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்து காயமடைந்தார். கூட்ட நெரிசல் காரணமாக மேடை சரிந்து விழுந்தது. இதனால் மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்த நடிகை பிரியங்கா மோகன் உள்பட மேடையில் இருந்தவர்கள் லேசான காயம் அடைந்தனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். தற்போது ஜெயம் ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தெலங்கானாவின் தோரூரில் மால் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது.

இதில் நடிகை பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் ஒரு சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நடிகை பிரியங்கா மோகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விழா மேடை என்பது ஒரு சிலரே ஏறி நிற்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்தது.
ஆனால் இந்த மேடையில் அதிகளவில் ஆட்கள் நின்றதுதான் மேடை சரிந்த விபத்து ஏற்பட காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை பிரியங்கா மோகன் பங்ககேற்ற விழா மேடை சரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அவருக்கு என்னாச்சு என்று ரசிர்கள் பலரும் அக்கறையுடன் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே தான் நலமாக இருப்பதாகவும். லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டிருப்பதாக பிரியங்கா மோகன் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Scary visuals. Hope the organisers come up with better safety standards. When they invite celebs like @priyankaamohan, local politicians , it’s mandatory to provide the double check the safety measures! pic.twitter.com/cYqvec5xO0
— Rajasekar (@sekartweets) October 3, 2024
இதனிடையே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க விழா ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், ஒன்றுக்கு இரண்டு முறை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சினிமா துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications