BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்!
சென்னை: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், தற்போது திமுகவில் ஐக்கியமானார். மகளிர் தின விழாவில் சங்கீதாவின் விவாகரத்து மனு குறித்து விஜய் மோசமான வார்த்தைகளை சொல்லி விமர்சனம் செய்ததால் அவருக்கு எதிராக ரஞ்சனா அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். பாஜகவில் இருந்த ரஞ்சனா நாச்சியார், தவெகவில் இணைந்து பின்னர் அங்கிருந்து திமுகவில் ஐக்கியமானார்.

நடிகை, தயாரிப்பாளர் ரஞ்சனா நாச்சியார் ராமநாதபுரம் சமஸ்தான ராஜா பாஸ்கர சேதுபதி பரம்பரையைச் சேர்ந்தவர். 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'நட்பே துணை' போன்ற படங்களில் நடித்தவர்.
தற்போது முழுநேர சமூக ஆர்வலராகச் செயல்பட்டு வரும் இவர், 'நாச்சியார் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கும், முதியோர் நலனுக்கும் உதவி செய்து வருகிறார்.
ரஞ்சனா நாச்சியார் செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கக் காரணம், பொது இடங்களில் நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்கும் அவரது பாணிதான்.
பேருந்து ஓட்டுநர் விவகாரம்: சமீபத்தில் போரூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை, மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்ததற்காகக் கண்டித்த விவகாரத்தில் இவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
நேரடித் தலையீடு: பொது இடங்களில் அநாகரீகமாக நடப்பவர்கள் அல்லது விதிகளை மீறுபவர்களை நேரடியாகக் கேமரா முன்னால் கண்டிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
2025 பிப்ரவரி 24 அன்று மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிராக பாஜகவிலிருந்து விலகினார்; அக்கட்சியின் கலை-கலாச்சாரப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தார். அடுத்த நாளே விஜய்யின் தவெகவில் இணைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தவெகவில் இருந்து விஜய் மீது விமர்சித்து 'ஒயிட் பேப்பர்' வெளியிட்டார்.
அதாவது மகளிர் தின விழாவில் விஜய் தனது விவாகரத்து குறித்து பேசிய போது "அதெல்லாம் வொர்த்தே இல்லை" என கூறியிருந்தார். அதாவது கட்டிய மனைவி, 27 ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவி வொர்த்தே இல்லை என கூறியதை அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களே ஏற்கவில்லை. அந்த வகையில்தான் விஜய்யின் கருத்துக்கு எதிராக ரஞ்சனா நாச்சியார் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் "ஊர் குழந்தைக்கு தாய்மாமனாக சீர் கொடுக்கும் முன், சொந்தக் குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பதே முக்கியம்" என விஜய்க்கு அறிவுரை வழங்கியிருந்தார்.
இதையடுத்து விஜய் அவரது குடும்பத்தினரை சந்திக்கவிடாமல் ஒருவர் தடுப்பதாகவும் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து அவரது பழைய புகைப்படங்களையும், ராமநாதபுரம் எம்பி தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட்ட போது பாஜகவில் இருந்த ரஞ்சனா, அவருக்காக பிரச்சாரம் செய்ததை எடுத்து போட்டு தவெகவினர் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 12 அன்று தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைலாம் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் கசிந்தன. ஆனால் தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கு எந்த மாதிரியான பொறுப்புகள் கிடைக்கும் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications