சித்ரா கணவர் நல்லவர் இல்லை.. எல்லா பெண்களுடனும் பழகுவார்.. போகாத pub இல்லை.. தோழி பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சித்ரா தப்பானவரை செலக்ட் பண்ணிட்டா. ஹேம்நாத் நல்லவரே கிடையாது. அவர் இதுவரை போகாத நைட் கிளப்புகளே இல்லை என சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: ஹேமந்த் நல்லவனே இல்லை… பல பெண்களுடன் தொடர்பு.. சித்ராவின் தோழி திடுக்கிடும் தகவல்..!

    நடிகை சித்ரா தற்கொலை குறித்து அவரது நெருங்கிய தோழி ரேகா நாயர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நானும் சித்ராவும் ஒன்றாக தங்கியிருந்தோம், ஒன்றாக சாப்பிட்டுள்ளோம், 3 நாட்கள் ஷூட்டிங்கிற்காக ஒரு இடத்திற்கு பயணம் செய்துள்ளோம்.

    அவர் தற்கொலை செய்து கொண்டார் என செய்தி வந்தவுடன் நண்பர்களாகிய நாங்கள் மிகவும் ஷாக்காகிவிட்டோம். சித்ரா எப்பவுமே ஜாலியாக இருப்பார். அவர் இதுவரை அவருடைய தனிப்பட்ட விஷயத்தை யாரிடமும் பகிர்ந்ததில்லை.

    எதுவும் சொல்ல மாட்டார்

    எதுவும் சொல்ல மாட்டார்

    பொதுவாக ஜாலியாக பேசும் அவர், தனியாக பார்க்கும் போது எதையும் சொல்லமாட்டார், எங்கே போறார் என்பதையும் சொல்லமாட்டார். என்ன நடக்குதுனு சொல்லமாட்டார். இப்ப இல்ல அவர் எப்பயோ இறந்திருக்க வேண்டும். அவ்வளவு போராட்டம் அவரது வாழ்க்கையில் ஆனால் அதையெல்லாம் தாண்டி வந்தார்.

    திருமணம்

    திருமணம்

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அவர் மிகவும் அமைதியாக இருந்தார். நான் கேட்ட போதுதான் சித்ரா, ஹேம்நாத்தை காதலிப்பது தெரியவந்தது. நிச்சயதார்த்த புகைப்படத்தை சித்ரா இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தவுடன் நான் அவரிடம் சொன்னது சித்ரா நீ எத்தனையோ விஷயங்களை கடந்து வந்துவிட்டாய், ஆனால் நீ திருமணம் செய்ய தேர்வு செய்தவர் தப்பானவர் என தெரிவித்தேன்.

    நல்லவர் கிடையாது

    நல்லவர் கிடையாது

    சித்ராவிடம் நேரடியாக சொன்னதுடன் நண்பர்களிடமும் சொன்னேன். ஹேம்நாத்தை எனக்கு ஏற்கெனவே தெரியும், அவருடைய நட்பு வட்டாரத்தையும் பின்புலத்தையும் எனக்கு தெரியும். அவர் நல்லவர் கிடையாது. சித்ராவுக்கு வாழ்க்கை, ஆனால் ஹேம்நாத்துக்கு இதுதான் தொழில். சென்னையில் இருக்கும் பாதி பெண்களுக்கு அவரை தெரிந்திருக்கும்.

    பிரச்சினை

    பிரச்சினை

    இந்த நேர்காணலை பார்த்துவிட்டு அவர் என்னிடம் பிரச்சினை செய்தாலும் கவலையில்லை. இனி இது போன்ற ஒருவர் முளைக்கக் கூடாது என நினைக்கிறேன். மீடியா துறைக்கே வரக் கூடாது என்பது சித்ராவின் தாய், தந்தையின் விருப்பம், ஆனாலும் தெரியாமல் வந்தார். சீரியலில் நடிக்கக் கூடாது என்றார்கள், ஆனால் தெரியாமல் நடித்தார். இப்போது வரை சித்ராவை 50 சதவீதம் மட்டுமே அவரது தந்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

    திருமணம் செய்தது ஏன்

    திருமணம் செய்தது ஏன்

    இப்படியிருந்தும் அவரது பெற்றோருக்கு தெரியாமல் பாட்டு, டான்ஸ் ஆகியவற்றை தனது சொந்த பணத்தில் கற்றுக் கொண்டார். ஹேம்நாத் எல்லா கிளப்புகளுக்கும் எல்லா பப்புகளுக்கும் செல்வார். இந்த விஷயம் சித்ராவுக்கு நன்றாக தெரியும். ஆனால் இவரை காதலித்து திருமணம் செய்தது ஏன் என தெரியவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+