ஷூட்டிங்கில் "அலறிய" நடிகை சாவித்திரி.. என்னனு பார்த்தால்? அட ஆண்டவா.. கடைசிவரை மாறலயே அந்த "கருணை"
சென்னை: நடிகை சாவித்திரியின் குணாள குணம் குறித்த செய்திகள் இணையத்தில் வட்டமடிக்கின்றன.. அவரது ஈகை குணத்தை குறிப்பிட்டு, அவரது ரசிகர்கள் அவ்வப்போது நெகிழ்ந்து விடுகிறார்கள். சாவித்திரி செய்த முதல் மற்றும் கடைசி உதவி எது தெரியுமா?
மகா நடிகை - சாவித்திரி என்றாலே இன்னமும் அவருக்கான ரசிகர்கள் ஏராளம். ஆந்திரா - தமிழ்நாடு என சாவித்திரியை ரசிகர்கள் உச்சிமுகந்து கொண்டாடினார்கள்.

உதவும் குணம்: அவரது வீட்டில், திரும்பும் திசையெல்லாம் ஷீல்டுகள் - கேடயங்கள் - பதக்கங்கள் இருக்குமாம்.. அவரது உதவும் குணம்தான், சாவித்ரியை இன்றுவரை உயர்த்தி பிடித்து வருகிறது... கோடி கோடியாய் சம்பாதித்து அத்தனையும் தான தருமங்கள் செய்துவிட்டு சாகும்போது கையில் காலணா கூட இல்லாமல் இறந்தாரே என்று சாவித்திரிக்காக வருத்தப்படும் ரசிகர்கள் இன்றும் உண்டு.
15, 16 வயதிலேயே சாவித்திரி நடிக்க வந்த நேரமது.. "பாதாள பைரவி" படத்தில் ஒரு டான்ஸ் காட்சியில் இவர் நடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு பணியில் இருந்த ஒரு ஊழியர் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மயங்கி விழுந்து விட்டார்.. இதைப்பார்த்து பதறிப்போன சாவித்திரி, புதுஇடம் என்றெல்லாம் கூட யோசிக்கலையே..
பதறிய சாவித்திரி: அங்கிருந்த நிர்வாகிகளிடம் பேசி, காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த ஊழியரை மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்ததில் மூளையில் கட்டி இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள்.
அதைக்கேள்விப்பட்டதுமே, இன்னும் அதிர்ந்துபோனார் சாவித்திரி.. சின்ன வயதில், தன்னுடைய அம்மா தனக்கு கையில் அணிவித்த மோதிரம் இருந்ததை டக்கென கழற்றிக்கொடுத்துவிட்டார்.. இதை விற்று, அந்த ஊழியரை காப்பாற்றுங்கள் என்றாராம்.. இத்தனைக்கும், சாவித்திரி யார் என்றுகூட தமிழகம் அறிந்திராத நேரமது.. நடிக்க வந்து சம்பாதிக்க துவங்காத சமயமது.
இரக்க குணம்: ஆக, இயற்கையிலேயே இரக்க குணம் இருந்ததற்கு இதைவிட வேறு என்ன சான்று இருந்துவிடமுடியும்.. ஆனால், இந்த குணம்தான் தன்னையும் சேர்த்து அழிக்க போகிறது என்று அந்த நேரங்களில் சாவித்திரி அறியவேயில்லை.. சினிமா வாழ்க்கைக்கு வந்து செய்த முதல் உதவி இது என்பது, சாவித்திரி பற்றின கூடுதல் தகவலாகும்.
தன்னுடைய இறுதிகாலங்களில் அவர் ரிக்க்ஷாகாரனுக்குக்கூட காசில்லாமல் கடன் சொல்லியுள்ளார்... எனவே, தன்னுடைய விலையுயர்ந்த பட்டுப்புடவையை அடகு வைத்து அவருடைய மகள் திருமணத்திற்கு பணம் தந்திருக்கிறார்..
கடைசி உதவி: வீட்டில் வேலையாட்களுக்கு பணம் தர முடியாத நிலையிலும்கூட, கார் டிரைவர் விடைபெற வந்து நின்றபோது, கைப்பையை திறந்து அதிலிருந்து கார் சாவியையும் ஆர்.சி.புத்தகத்தையும் கொடுத்து, இதை வைத்து பிழைத்துக்கொள் என்று சொன்ன குணவதி.. ஆனால், அந்த கார் டிரைவர், பல டாக்ஸிகளை வாங்கி, பெரிய பணக்காரராகி, சமீபத்தில் தான் இறந்துபோனாராம்.. ஆனால், தன் சுயநினைவோடு இருந்து சாவித்திரி செய்த கடைசி உதவி இதுதான்
சில மனிதர்கள் வாழும்போதே மறைந்துவிடுகிறார்கள்.. சிலர் மறைந்தும் வாழ்கிறார்கள்.. வள்ளல் குணம் கொண்ட சாவித்திரியும் அப்படித்தான்..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications