அட்ஜெஸ்ட்மெண்ட் நடப்பது எப்படி? கேரளா போல் தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லை.. நடிகை ஷகீலா பகீர்
சென்னை: மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மலையாளத்தை போல் தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லை இருக்கு எனவும், அட்ஜெஸ்ட்மெண்ட் நடப்பது எப்படி? என்பது பற்றியும் நடிகை ஷகீலா பரபரப்பான தகவல்களை கூறி உள்ளார்.
சினிமா துறை.. கிசுகிசுக்கள் அதிகம் வரும் இடங்களில் ஒன்று. இளம் வயது நடிகர், நடிகை முதல் 60 வயதை கடந்த நடிகர், நடிகைகள் என அனைத்து வயதினர் பற்றியும் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி பேசுப்பொருளாக்கும் துறை தான் சினிமா.

குறிப்பாக அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரம் என்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதுதொடர்பாக அவ்வப்போது சில நடிகைகள் வெளிப்படையாக தொலைக்காட்சி பேட்டிகளில் கூறி வருகின்றனர். பலரும் வெளியே எதுவும் கூறுவது இல்லை என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் கேரளாவின் மலையாள திரையுலகில் நடந்த சம்பவம் தற்போது மொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. மலையாள திரையுலகில் நடிகைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2019ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆணைய அறிக்கையில் உள்ள விபரங்கள் தான் தற்போது வெளியாகி பரபரப்பபை கிளப்பி உள்ளன.
மலையாள திரையுலகம் ஒரு 15 பேர் கொண்ட மாபியாக்களின் கையில் இருக்கிறது. அரை குறை ஆடையுடன் நடிக்க கட்டாயப்படுத்துவதாகவும் நெருக்கமான, முத்தமிடும் காட்சிகளை அதிக முறை காட்சிப்படுத்தப்படுத்துவது. செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசுவது உள்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக போலீஸ் ஐஜி தலைமையில் 7 பேர் கொண்ட தனிக்குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் பாலியல் தொல்லை தொடர்பான புகாரின் காரணமாக மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதற்கிடையே பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.
இதனால் மலையாள திரையுலகத்தை ஹேமா விசாரணை ஆணையத்தின் அறிக்கை புரட்டிப்போட்டுள்ளது. இந்நிலையில் தான் மலையாளத்தை போல் தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லை உள்ளது என்று நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். தமிழ், கேரளா, தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள ஷகீலா இதுபற்றி பேசியிருப்பது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு ஷகீலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
மலையாள திரையுலகை போல் தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லை உள்ளது. தெலுங்கிலும் இதை விட ஜாஸ்தியா இருக்கு. ஹிந்தியை பொறுத்தவரை இப்படியான சூழல் இல்லை. அவர்கள் எடுத்தவுடன் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். அங்கு casting couch (படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது) பிரச்சனை எல்லாம் வராது .அங்கு நெப்போடிசம் பிரச்சனை தான் இருக்கு. ஆனால் தெலுங்கில் வேறலெவலில் பிரச்சனை என்பது உள்ளது. இது எல்லாமே பேசி வச்சி வரது தான்.
நீ இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் எனது தயாரிப்பாளர் மற்றும் எனக்கும் அட்ஜெஸ்ட் பண்ண வேண்டும் என்று மேனேஜர் பேசுவார். இது எல்லாமே பேசி வச்சி வராது தான். ஆனால் முக்கால்வாசி படம் நடித்த பிறகு கிராக்கி காட்ட தொடங்குகின்றனர். முக்கால்வாசி படம் நடித்து விட்டோமே.. இனிமே என்ன? எனக்கு அதில் ஈடுபாடு இல்லை என கூறுவதால் தான் பிரச்சனை வருகிறது. சரியான வார்னிங் கண்டிப்பாக ஆண்களுக்கு கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது '' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications