காலில் விழுந்த நடிகர்..நைட் 1 மணிக்கு போன் பண்ணி.. திடீரென ரோட்டுக்கு வந்த நடிகை சோனா! பரபர கோலிவுட்
சென்னை: கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த சோனா கடந்த சில நாட்களாக கொடுத்த பேட்டிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென பெப்சி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். தனது பயோபிக்கை வெப் சீரிஸ் ஆக எடுத்து வைத்ததாகவும் அதனை சிலர் எடுத்து வைத்துக் கொண்டு தர முடியாது என மிரட்டுவதாக பரபரப்பு புகாரை அளித்திருக்கிறார்.
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய அளவில் நாயகன், நாயகிகளுக்கு இணையாக கவர்ச்சி நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் கொண்டாடப்படுவது, அதற்குப் பிறகு அவர்கள் மறைந்து போவது அல்லது மறக்கடிக்கப்படுவது வழக்கம்தான்.

டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா என பல கவர்ச்சி நடிகைகள் தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கின்றனர். அப்படி கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்தவர் நடிகை சோனா. சில படங்களில் கவர்ச்சியாகவும் சில படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்திருக்கிறார். பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவுக்கு தோழியாக நடித்த அவர் அதற்கு பிறகு கவர்ச்சி வேடங்களிலேயே நடித்தார்.
சில ஆண்டுகளில் அவர் காணாமலும் போனார். அதே நேரத்தில் சர்ச்சைகளில் அவர் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுத்தடுத்து புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவர் அளித்து வரும் பேட்டிகள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில நடிகர்கள் குறித்தும், இயக்குனர்கள் குறித்தும் அவர் அளித்த பேட்டிகள் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென மீண்டும் போராட்டத்தில் குதித்திருக்கிறார் நடிகை சோனா.
இன்று பெப்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர் தனது பயோபிக் வெப்சீரிசை மேனேஜர் சங்கர் என்பவர் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டல் விடுப்பதாக புகார் தந்திருக்கிறார். ஸ்மோக் என்ற பெயரில் மலையாள சினிமாவில் தான் நடித்த போது ஒரு நடிகர் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சியது, பார்ட்டியில் ஒரு இயக்குனர் தன்னுடன் பழக வேண்டும் என போதையில் மிரட்டியது என பல்வேறு சம்பவங்கள் அடங்கிய தனது வாழ்க்கை வரலாற்றை நடிகை சோனா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த தொடரில் மேனேஜராக பணியாற்றிய சங்கர் என்பவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறி இருக்கிறார் சோனா. பெப்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர்," 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கிறேன். எல்லா பக்கமும் எனக்கு பிரச்சனை வருகிறது. 10 ஆண்டுகளாக என்னை வேலை செய்ய சிலர் விடுவதில்லை. ஒருவர் என்னிடம் அத்துமீறினார் என சொன்னதற்கே என்னை இப்போது வரை வேலை செய்ய விடவில்லை. சில மலையாள படங்களில் வேலை பார்த்து வந்தேன். தற்போது நான் உண்டு எனது வேலை உண்டு என இருக்கிறேன்.
இந்த நிலையில் நானே ஒரு குழுவை அமைத்து எனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வெளியிட திட்டமிட்டேன். ஆனால் அது சரியாக வரவில்லை. இதை அடுத்து ஸ்மோக் என்ற பெயரில் வெப் சீரிஸ் தயாரித்து வருகிறேன். பூஜை போட்ட நாளில் இருந்து பிரச்சனை தான். அனைத்தையும் தாண்டி முதல் ஷெட்யூலை முடித்தோம்.
இரண்டாவது ஷெட்யூலுக்காக ஒருவரை மேனேஜராக நியமித்தோம். ஆனால் அவரும் என்னிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டார். மேலும் கேமராமேன் டிபார்ட்மெண்டிடமிருந்து ஹார்ட்டிஸ்கையும் எடுத்துவிட்டு போய்விட்டார். இது குறித்து பெப்சி, ப்ரொடியூசர் கவுன்சிலில் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தனி பெண்ணாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். பெப்சியிடம் புகார் அளித்தால் அவர்கள் உரிய மரியாதை தரவில்லை. போலீஸ்கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணு என மிரட்டுகிறார்கள். இதற்கு மேல் நான் சாக வேண்டியது தான். எனக்கு நீதி வேண்டும்" என பேசியுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications