இண்டிகோ விமானத்தில் 23 ஆயிரம் டிக்கெட்! ஒரு தண்ணீர் பாட்டில் கூட தரலை! நடிகை வித்யுலேகா புகார்
சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு பயணிக்க ஒரு வழிக்கு (One way) மட்டும் ரூ23 ஆயிரம் வசூலித்த இண்டிகோ நிறுவனம், நீண்ட நேரமாக புறப்படாமல் பயணிகளை மணிக்கணக்கில் காக்க வைத்து, ஒரு தண்ணீர் பாட்டிலை கூட வழங்கவில்லை என நடிகை வித்யுலேகா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை வித்யுராமன் கூறியிருப்பதாவது: இண்டிகோ விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரூ 23 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் 6.15 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட வேண்டிய இண்டிகோ விமானம், திட்டமிட்ட நேரத்தில் புறப்படவில்லை.

முந்தைய நாளே பல்வேறு விமானங்களிலும் அந்த சென்னை செல்லும் வி விமானத்திலும் பயணிக்கவிருந்த பயணிகள் இண்டிகோ நிர்வாகத்தினருடன் சண்டையிட்டு பார்த்தார்கள், கெஞ்சி பார்த்தார்கள், எல்லாரும் ஒட்டுமொத்தமாக போராடியும் பார்த்தார்கள். ஆனால் ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
இதனால் மணிக்கணக்காக வயதானவர்கள், கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள் எல்லாம் சிக்கித் தவித்தனர். இண்டிகோ நிர்வாகத்தின் மீது இருந்த கோபத்தை பயணிகள், அங்கிருந்த ஊழியர்களின் மீது காட்டியதால் அவர்களும் எந்த பதிலையும் தராமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இரவு 1 மணி வரை பயணிகளுக்கு ஒரு தண்ணீர் பாட்டிலை கூட அவர்கள் தரவில்லை. விமானத்தில் இருந்த குழுவின் பணி முடிவடைந்ததால் அவர்கள் வெளியே சென்றுவிட்டார்கள். ஆனால் அதே விமானத்தில் பயணிகளாக இருந்த ஆஃப் டூட்டி கேபின் குழுவினர்ஸ நள்ளிரவில் 1 மணிக்கு தண்ணீர் கொடுத்து உதவினார்கள். இப்படி பெரும் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தேன்.
புதிய டிஜிசிஏ விதிகளை அமல்படுத்த இண்டிகோவுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் உள்ளது. எனினும் சரியான மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் போனதே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் ஒவ்வொருவருக்கும் டிக்கெட் விலையை விட 3 மடங்கு நஷ்டஈடை தர வேண்டும் என நடிகை வித்யுலேகா தெரிவித்துள்ளார். வித்யுலேகா நடிகர் மோகன்ராமின் மகன். தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக உள்ள பி.எஸ். ராமன், சித்தப்பா முறை என்பது குறிப்பிடத்தக்கது. வித்யுலேகா காமெடி நடிகை, "நீதானே என் பொன் வசந்தம்" படத்தில் அறிமுகமானார். அண்மையில் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, சர்வதேச விமானங்களை ரத்து செய்தது. இதில் டெல்லி நிலையத்தில் 172 விமானங்களும் அடங்கும். மும்பையில் 118 விமானங்களும் கொல்கத்தாவில் 35 விமானங்களும் சென்னையில் 26 விமானங்களும் கோவாவில் 11 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் நேற்று 3 ஆவது நாளாக பயணிகள் பாதிக்கப்பட்டனர். விமான நிலையங்களுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்றும் 4ஆவது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்களை இயக்க விமானிகள், விமான பணியாளர்கள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications