விஜயலட்சுமி தந்த வாக்குமூலம்.. இரவில் தொற்றிய பரபரப்பு..இங்கும் அங்கும் மெசேஜ் பறக்க! என்னது சீமானா?
சென்னை: நடிகை விஜயலட்சுமி நேற்று மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் கொடுத்த நிலையில் இரவு முழுக்க நாம் தமிழர் கட்சியினர் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
நடிகை விஜயலட்சுமி - சீமான் விவகாரம் தமிழ்நாடு அரசியலை மீண்டும் பூதாகரமாக்கி உள்ளது. சீமான் என்னை ஏமாற்றிவிட்டார்.. சீமான் என்னை திருமணம் செய்வதாக கூறினார்.. என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி வருகிறார்.

எதிர் பக்கம் சீமானோ.. இது பொய்யான புகார். அரசியல் ரீதியாக தனக்கு எதிராக வைக்கப்படும் புகார் என்று கூறுகிறார். முக்கியமாக விஜயலட்சுமி சீமானிடம் பணம் பறிக்க பார்க்கிறார். அவரிடம் பணம் கேட்க வேண்டும் என்று இப்படி மிரட்டுகிறார் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
விஜயலட்சுமி வைக்கும் புகார்கள்: விஜயலட்சுமி வைக்கும் புகார்கள் பின்வருமாறு.. நீண்ட காலமாக சீமான் என்னை காதலிப்பதாக கூறினார். நாங்கள் நெருக்கமாக இருந்தோம். ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பின் அரசியல் ரீதியாக தேவைக்காக பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை பாலியல் ரீதியாக தேவைகளுக்கு பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறினார். இப்போது ஏமாற்றியதும் இல்லாமல் என்னை மிரட்டி வருகிறார்.
முக்கியமாக அரசியல் ரீதியாக நான் தமிழ்நாடு வரக்கூடாது என்று மிரட்டி வருகிறார். நான் தமிழ்நாடு வந்தால் நாம் தமிழர் கட்சியினர் என்னை தாக்குவார்கள் என்று சீமான் மிரட்டுவதாக விஜயலட்சுமி கூறி வருகிறார். இதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
சீமான் தரப்பு: இன்னொரு பக்கம் நாம் தமிழர் தரப்போ, விஜயலட்சுமி மாற்றி மாற்றி பேசி வருகிறார். அவர் பொய் சொல்கிறார். விஜயலட்சுமி பணம்தன் பறிக்க முயன்ற ஆடியோக்கள் உள்ளன. அவை இணையத்திலேயே இருக்கின்றன என்று நாம் தமிழர் தரப்பினர் புகார் வைக்கின்றனர்.
வாக்குமூலம் - புகார்: அதன்பின் சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்தார். அதில் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்துள்ளார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.
இது தொடர்பாக நேற்று முதல்நாள் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையின் போது நடிகை விஜயலட்சுமி நடந்து கொண்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜயலட்சுமி மிகவும் எமோஷனலாக காணப்பட்டு உள்ளார். அடிக்கடி விசாரணையில் அழுதுள்ளார்.சீமானை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது.விசாரணையில் சில முக்கிய வீடியோக்களை விஜயலட்சுமி கொடுத்துள்ளார்.
முக்கிய போன் ரெக்கார்டுகள், மெசேஜ்கள், பணம் கொடுத்த வங்கி விவரங்களையும் விஜயலட்சுமி போலீசில் பகிர்ந்து உள்ளார். இதையடுத்து சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இரவு முழுக்க பரபரப்பு: விஜயலட்சுமி நேற்று மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் கொடுத்த நிலையில் இரவு முழுக்க நாம் தமிழர் கட்சியினர் பதற்றத்துடன் காணப்பட்டனர். இதில் சீமான் மீது எப்ஐஆர் போடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது.
அதோடு சீமான் இரவே கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் வந்தன. நாம் தமிழர் நிர்வாகிகள் இதனால் மாறி மாறி சமூக வலைத்தளங்களில் விசாரித்து போஸ்டுகள், மெசேஜ்களை போட தொடங்கினர். ஆனால் நேற்று அப்படி எதுவும் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. மாஜிஸ்திரேட் முன் விசாரணை நடந்துள்ள நிலையில் விரைவில் எப்ஐஆர் பதிய வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications