சீமான் சார்கிட்ட பேசிட்டேன்! பணம்லாம் வாங்கலை.. இனி சென்னைக்கு வரமாட்டேன்! விஜயலட்சுமி அந்தர் பல்டி
சென்னை: சீமான் சார் கிட்ட பேசிவிட்டேன் என்றும் அவரிடம் பணம் எல்லாம் வாங்கவில்லை என்றும் கூறிய நடிகை விஜயலட்சுமி இனி சென்னைக்கு வரவே மாட்டேன் என கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி, கடந்த 2005-ஆம் ஆண்டு சீமானுடன் நடித்த போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் பலமுறை விஜயலட்சுமி பொதுவெளியில் புகாராக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இதன் எதிரொலியாக நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சீமான் மீது பொய் புகார் அளித்ததாக கூறி விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாகவும் ஆபாசமாகவும் விமர்சித்திருந்தனர். மேலும் சீமானிடம் விஜயலட்சுமி புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் ஒரு கேவலம் என்றும் வேங்கைவயல் விவகாரம் போல் என் மீது கழிவ ஏன் கரைக்குறீங்க என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
சீமான் பேசும் ஒவ்வொரு பதிலடிக்கும் நடிகை விஜயலட்சுமி ஒருமையிலும் ஆபாசமாகவும் பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் அவர் வீடியோவில் கூறுகையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் போரில் இறந்து கொண்டிருந்த போது சீமான் என்னுடன்தான் இருந்தார் என கூறியிருந்தார். இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த இரு முறை வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் அவர் நாளை மறுநாள் ஆஜராவதாக இருந்தது. ஆனால் அதற்குள் நேற்று நள்ளிரவில் ஒரு ட்விஸ்ட் நடந்துவிட்டது. சீமான் மீது கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் வாங்கிக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிக்கையில் கடந்த சில தினங்களாக வீரலட்சுமி வேறு ரூட்டில் செல்கிறார். என்னையும் வேறு ரூட்டில் தள்ள பார்க்கிறார்.
ஏதேதோ பேசுகிறார். எதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்டுவிட்டு பேசும்படி கூறியிருந்தேன். இதனால் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவே என்னை வெளியேறும்படி சொல்லிவிட்டார்கள் (வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தங்கியிருந்தார்). இரவு நேரம் போலீஸார் வந்து சமாதானம் பேசி என்னை அங்கே தங்க வைத்தார்கள்.
நான் புகாரை வாபஸ் பெறுதவற்கு யாரும் என்னை மிரட்டவில்லை, நான் சீமானிடம் பணம் வாங்கவில்லை. சீமான் மீது கொடுத்த புகாரால் எழும் பிரச்சினைகளை என்னால் சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் நான் வாபஸ் பெற்றேன். சீமான் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார். அவருடன் மோதி என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். சீமான் சாரிடம் இதுகுறித்து பேசினேன்.
நான் இனி சென்னைக்கு வர மாட்டேன், பெங்களூர் செல்கிறேன். இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சீமான் மீது நடவடிக்கை எடுக்காமல் சென்னையை விட்டு போக மாட்டேன் என விஜயலட்சுமி கூறியிருந்த நிலையில் அவருடைய திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை. யாரும் மிரட்டவும் இல்லை புகாரை வாபஸ் பெறுமாறு கட்டாயப்படுத்தவும் இல்லை என கூறியிருந்தார். வீரலட்சுமியும் சீமானும் விஜயலட்சுமியும் சமாதானம் ஆனால் மகிழ்ச்சிதான் என கூறியிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications