என் வக்கீல்னு பேட்டியெல்லாம் கொடுக்கிறாரே.. அவர் சாட்டை துரைமுருகன் அனுப்பி வைத்தவர்.. விஜயலட்சுமி
சென்னை: சீமான் மீதான கேஸை வாபஸ் வாங்கும்போது என்னுடன் இருந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனை சாட்டை துரைமுருகன்தான் அனுப்பி வைத்தார் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி பரபரப்பு புகாரை கூறியிருந்தார். இதை சீமான் மறுப்பு தெரிவித்து ஆதாரங்களை தருமாறு கேட்டிருந்தார்.

மேலும் சீமானை எதிர்கொள்ள முடியவில்லை என கூறி வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து அன்றைய தினமே அவர் பெங்களூருக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி செட்டில்மென்ட்டை வாங்கிக் கொண்டு கேஸை வாபஸ் பெற்றார் என பலர் தெரிவித்து வந்தனர். இதற்கு பாலசுப்பிரமணியன் பதிலடி கொடுக்கையில், நான் விஜயலட்சுமியின் வழக்கறிஞர். அவர் சீமானிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை, ஆனால் பயில்வான் ரங்கநாதன் போன்றோர் விஜயலட்சுமி 10 கோடி வாங்கிவிட்டதாக கூறுகிறார்கள். இப்படியே பேசினால் அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு போடுவோம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து விஜயலட்சுமி பேசிய மற்றொரு வீடியோவில் நான் ராமாபுரம் காவல் நிலையத்தில் சீமான் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கும் முறைகள் குறித்து எனக்கு தெரியாது, அந்த formalities தெரியாததால் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனை அனுப்பி வைத்ததே சாட்டை துரைமுருகன்தான்.
அந்த வக்கீலை எனக்கு முன்ன பின்ன கூட தெரியாது. அந்த வழக்கறிஞர் மீடியாக்களில் விஜயலட்சுமியின் வழக்கறிஞர் என்றே பேட்டி கொடுத்து வருகிறார். எனவே மீடியாக்களுக்கு நான் தெளிவுப்படுத்திக் கொள்கிறேன், அவர் என்னுடைய வழக்கறிஞர் கிடையாது. வழக்கை வாபஸ் வாங்க வைப்பதற்காக சாட்டை துரைமுருகன் அனுப்பி வைத்தவர்தான் பாலசுப்பிரமணியன்.

எனவே அவரும் சீமான் தரப்பு ஆள்தான். இதற்கு மேல் என் விவகாரம் தொடர்பாக நான் பாலசுப்பிரமணியத்தை அணுக போவதில்லை. மீடியாக்களும் அவரை என் வழக்கறிஞர் என போட வேண்டாம். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை பாலசுப்பிரமணியத்திடமே நான் சொல்லிவிட்டேன், நீங்கள் அந்த கேஸை வாபஸ் வாங்க சாட்டை துரைமுருகனால் அனுப்பப்பட்டவர்.
எனவே என் வழக்கு தொடர்பாக நான் உங்களுடன் டீல் செய்ய போவதில்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டேன்.. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். அவரை கேட்டு பேட்டி எடுத்து என் விவகாரத்தை பெரிதாக்காதீர்கள். தயவு செய்து என் விவகாரத்தில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என பணிவாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications