மதுபோதையில் தாக்கி பணத்தை பிடுங்கி சென்ற ‘கணவர்’ சீமான் - போலீசில் விஜயலட்சுமி Part-2
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் குடும்பம் நடத்திய போது பெருமளவு பணத்தை பறித்துக் கொண்டார்; பணம் தராத போது மதுபோதையில் தம்மை தாக்கி பணம் பறித்தார் என சென்னை போலீசில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
சென்னை போலீசில் நடிகை விஜயலட்சுமி நேற்று கொடுத்த புகாரில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது: என்னுடைய வேளச்சேரி வீட்டில் நானும் என் கணவர் சீமானும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். நான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. என் தாய்க்கு பேரப்பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

கட்டாய கருக்கலைப்பு: ஆனாம் சீமான், தாம் அரசியலில் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். அப்போது நான் 7 முறை கருவுற்றேன். ஆனால் 7 முறையும் என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை கட்டாயப்படுத்தி நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரைகள் கொடுத்து கருச்சிதைவு செய்தார். இதனால் என்னுடைய உடலும் உள்ளமும் பலவீனமானது. எங்கள் குடும்பம் நிம்மதியும் இழந்தது.

மதுபோதையில் டார்ச்சர், பணம் பறிப்பு: நான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த சுமார் ரூ60,00,000 பணம், ரூ35,00,000 நகைகள் ஆகியவற்றை சிறுக, சிறுக என்னிடம் சீமான் பறித்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் நான் பணம் கொடுக்க மறுக்கவே, சீமான் மது அருந்திவிட்டு என்னை துன்புறுத்தி அடித்து தாக்கி பணத்தைப் பறித்துச் செல்வார். இவ்வாறு நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications