7 முறை கருக்கலைப்பு மாத்திரை..பிரபாகரன் முன்னிலையில் திருமணம்.. சீமான் குறித்து விஜயலட்சுமி சொன்னது!
சென்னை: தம்மை திருமணம் செய்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 7 முறை கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைக்க செய்தார்; விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் வெளிப்படையாக திருமணம் நடத்தப்படும் என வாக்குறுதி கொடுத்தார் என நடிகை விஜயலட்சுமி கூறினார்.
சென்னையில் சீமான் மீது நேற்று போலீசில் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறிய முக்கிய பாயிண்டுகள்:

- 2008-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக சீமானும் நானும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். அப்போது தாம் பெரியாரிஸ்ட், கிறிஸ்தவர் என்பதால் மாங்கல்யம் அணிவிக்க முடியாது; மாலை மட்டும் மாற்றிக் கொள்வோம். அதுவே திருமண அடையாளம் என்றார்.
- மதுரையில் மாலை மாற்றி திருமணம் செய்த போது இப்போதைக்கு இதனை வெளியே தெரிவிக்க வேண்டாம்; தலைவர் பிரபாகரன் முன்னிலையில் உலகம் அறிய பிரம்மாண்டமான திருமணம் நடத்துவோம் என வாக்குறுதி அளித்தார் சீமான்.
- சீமான் என்னுடன் இருந்த தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை ஊடகங்களிடம் கொடுத்திருக்கிறேன். நானும் சீமானும் கணவன் - மனைவி என்பதற்கு இவைதான் ஆதாரங்கள்.
- சீமான் எனக்கு ரூ1 கோடி கொடுக்கவில்லை. எனக்கு சீமான் தரப்பில் இருந்து ரூ3.5 லட்சம் மட்டுமே தந்துள்ளனர். அதற்கான ஆதாரம் இருக்கிறது.
- சீமான் பிரபாகரன் பெயரை உச்சரித்துக் கொண்டு திமிர்த்தனமாக பேசுகிறார். பிரபாகரனின் பெயரை இழிவுபடுத்துகிறார்.
- எனக்கு தெரியாமல் 7 முறை கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தவர் சீமான். என் அனுமதியில்லாமல் கருவை சிதைத்தவர் சீமான். என்னை தற்கொலைக்குத் தூண்டியவர் சீமான்.

- நான் பணத்துக்காக செய்கிற நபர் என்றெல்லாம் சொல்ல வேண்டாம். என்னை கேவலப்படுத்திவிடாதீர்கள். நான் பலமுறை செத்துவிடலாம் என நினைத்திருக்கிறேன்.
- சீமான் தூண்டுதலில் மதுரை செல்வம் என்னை பற்றி இழிவாக, தவறாக பல செய்திகளைப் பரப்புகிறார். மதுரை செல்வத்தால் என் உயிருக்கு ஆபத்து. எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
- சீமான் இரக்கமற்ற மனிதர். அவருடைய மனைவியான என்னையே மோசமான நபராக சித்தரிக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications