அனைத்து சாதியினரும் அர்ச்சகர்.. ஸ்டாலினை கிண்டல் செய்த விந்தியா.. பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியது.
முதற்கட்டமாக அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்டெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்பு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அறிவித்து அதனை நடைமுறைபடுத்தியது.
இதனை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை தி.மு.க அரசு அமல்படுத்தி இருக்கிறது

சாதித்த ஸ்டாலின்
தமிழ்நாட்டில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் கடந்த 1970-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது 51 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

சுஹாஞ்சனா
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த முத்தான திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

ஆகம விதிகள் மீறல்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஆகம விதிகளின்படிதான் பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் அ.தி.மு.க பிரமுகரும், நடிகையுமான விந்தியா இந்த திட்டத்தை கேலி செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

விந்தியா காட்டம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சமூக நீதி. ஆனால், தன் குடும்பம் மட்டும்தான் திமுக தலைவர் ஆகலாம் என்பது ஸ்டாலின் நீதி. உங்களுக்கு வந்தா ரத்தம்; மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?' என்று கடுமையாக தாக்கி உள்ளார். அதே வேளையில் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் நடிகை விந்தியாவை போட்டு வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications