தலைவரா இல்ல.. மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க.. ‘ஓபிஎஸ் அணியில் இணைகிறேனா?’ - கொந்தளித்த விந்தியா!
சென்னை : கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் தலைவராக இல்லை, மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க என அதிமுகவைச் சேர்ந்த நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் வந்த தீர்ப்பைத் தொடர்ந்து பலர் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகின்றனர். மேலும் பலருடனும் ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை விந்தியா, தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தவ நான்.. இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக விவகாரம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை வெளியிட உள்ளது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஓபிஎஸ் அழைப்பை ஈபிஎஸ் ஏற்காத நிலையில், அதிமுகவை கைப்பற்றுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஓபிஎஸ் டீம் டாக்
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை தன் பக்கம் கொண்டு வர ஓபிஎஸ் திட்டமிட்டு வருகிறார். ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் பலர் ஓபிஎஸ் அணிக்குத் தாவி வருகின்றனர். உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். தொடர்ந்து பலருடனும் ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நடிகை விந்தியாவுடன் பேச்சுவார்த்தை?
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ள பலரிடமும், ஓபிஎஸ் அணியின் அசைன்மெண்ட் டீம் பேசி வருகிறது. அவர்களில் பலரிடம் இருந்தும் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருக்கும் நடிகை விந்தியாவுடனும் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதனால், அவரும் ஓபிஎஸ் பக்கம் சாய்வாரா என பரபரப்பு எழுந்தது.

மனுஷனா கூட
இந்நிலையில் நடிகை விந்தியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தவ நான்.. இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன்.. கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் தலைவரா இல்லை, மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓபிஎஸ் அணிக்குத் தாவுவாரா எனும் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications