ஆ.. அந்த நடிகையா? ரூ.200 இன்னும் வரலயாமே.. ஒடிசா ரயில் விபத்து பற்றி பதிவிட பணமா - ட்விட்டரில் கலகல
சென்னை: ரயில் விபத்து குறித்த உரையாடலை பதிவிட்டதற்காக, ஒரு தரப்பினர் தன்னை விமர்சிப்பதாக கூறி அவர்களுக்கு நக்கலாக பதிலடி கொடுத்து உள்ளார் நடிகை வினோதினி.
ஒடிசா மாநில பாலசோரில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் இந்தியா மீளவில்லை. தொடர்ந்து அது தொடர்பான செய்திகளும் சமூக வலைதள பதிவுகளும் பகிரப்பட்டுக்கொண்டே வருகின்றன. 280க்கும் அதிகமானவர்களை பலி வாங்கிய இந்த விபத்தில் உயிரிழந்த சிலரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை வினோதினி ரயில் விபத்து தொடர்பாக ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "இப்பொழுது ஒரு உதவி இயக்குநர் போன் செய்திருந்தார். ஊருக்கு குலதெய்வக்கோவிலுக்குப் போயிருப்பதாகவும், நாளை இரவு ரயிலில் சென்னை திரும்புவதாகவும் அவர் சொல்ல, ரயில் என்று சொன்னவுடன் மனது பதை பதைக்கிறது. பத்திரமா வாங்கன்னு நான் சொன்னதற்கு, ஹ்ம்ம் என்ற சப்தம் மட்டும் பதில்.
அவருக்குள்ளும் அந்த காட்சிகள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று புரிந்தது. இது என்ன கொடுமை? அரசியலெல்லாம் தவிர்த்து இப்படி ஒரு பெரும் விபத்து, பெரும் துயரம். தினமும் மனித இனம் படும் அவலங்களையும் தவறு செய்யாத மனிதர்களும் குழந்தைகளும் கொத்து கொத்தாக இதுபோன்ற கோரமான வழிகளில் சாவதைப் பார்த்து ஏற்கனவே மழுங்கிவிட்ட கடவுள் நம்பிக்கை முற்றிலும் அழிந்துவிடும்போல் இருக்கிறது. வாழ்க்கையை எது தீர்மானிக்கிறது?" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் வினோதினி வெளியிட்ட இந்த பதிவுக்கு பாஜக ஆதரவாளர்கள் பலர் அவரை கடுமையாக விமர்சித்து கருத்திட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு நக்கலாக பதிலளித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார் வினோதினி.

அதில், "ரயில் விபத்துப் பற்றி நடந்த ஒரு உண்மையான உரையாடலைப் பதிவு செய்தேன். அதற்கு பொங்கினது எல்லோரும் ஒரே தரப்பு மக்கள் மட்டும்தான். எது என்று ஸ்க்ரோல் செய்து பார்த்தால் உங்களுக்கே புரியும். விபத்து என்றால் நடக்கத்தானே செய்யும், வேறொருவர் ஆட்சியில் இருந்தபோது நடக்கவில்லையா, அப்புறம் இந்த நாளின் மிக பிரபலமான எதிர்வாதம் - கள்ளச்சாராய சாவைப்பற்றி ஏன் பேசவில்லை.
அப்புறம் அதைவிட பிரபலமான லாஜிக் இல்லாத வாதம் - 200 ரூ வாங்கிவிட்டாயா (PS: இன்றைய அமௌண்ட் இப்பொழுது வரை க்ரெடிட் ஆகவில்லை)... அதைப்படிக்கும் பொழுது ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்தது. "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல.." இன்னொரு வாக்கியம் எது என்று கணிங்க பார்க்கலாம்? க்ளூ: அதில் குறுகுறு என்ற வார்த்தை வரும்." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications