2014ல் தமிழ்நாடு மின் வாரியத்தில்.. அதானி செய்த பெரிய நிலக்கரி ஊழல்? ராகுல் காந்தி குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி விற்பனை செய்ததில் 2014ல் அதானி மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஊடகங்களில் வெளியான செய்தியை பகிர்ந்து ராகுல் காந்தி இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், பாஜக ஆட்சியில் நடந்த மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடிஜியின் நெருங்கிய நண்பன் அதானி குறைந்த தர நிலக்கரியை மூன்று மடங்கு விலை அதிகமாக விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார்.

ED, CBI மற்றும் IT இந்த வெளிப்படையான ஊழலில் அமைதியாக இருந்துள்ளன. அவர்கள் இப்படி அமைதியாக எத்தனை "டெம்போக்கள் பணம்" பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா?
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும்., என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
செய்தி சொல்வது என்ன?: அதானி குறைந்த தர நிலக்கரியை தமிழ்நாட்டிற்கு மின் வாரியத்திற்கு அதிக விலைக்கு விற்று மோசடி செய்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. 2014ல் அதிமுக ஆட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அப்போது இருந்தது.
அதானி குழுமம் குறைந்த தரம் கொண்ட நிலக்கரியை, தமிழ்நாடு அரசின் அரசு மின் பயன்பாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
இரண்டு பேருக்கும் இடையில் நடந்த பரிவர்த்தனைகளில் மிகவும் விலை உயர்ந்த தூய்மையான நிலக்கரி என்று கூறி விற்பனை செய்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது, பைனான்சியல் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள ஆதாரத்தின்படி, இந்த ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
Organized Crime and Corruption Reporting Project என்று அமைப்பு எடுத்த ஆவணங்களை வைத்து பைனான்சியல் டைம்ஸ் ஊடகம் சோதனை செய்து இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
ஒவ்வொரு நிலக்கரிக்கும் ஒரு தரம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவுள்ள நிலக்கரி குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை மட்டுமே தயாரிக்க முடியும்., தரம் குறைய குறைய மின்சார அளவும் குறையும். அந்த வகையில் தரம் குறைந்த நிலக்கரியாக தரம் கூடிய நிலக்கரியாக விற்பனை செய்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

குறைந்த தர நிலக்கரியை மின்சாரத்திற்காக பயன்படுத்துவதால், அதிக எரிபொருளை எரிப்பதால், காற்றின் தரம் குறையும். இது சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு நிலக்கரியை வாங்கிய மாநில அரசுக்கு பெரிய இழப்பும் ஏற்படும்.
2014 ஜனவரியில் இந்தோனேசியா கப்பல் ஒன்றிடம் இருந்து 3500 கிலோ கலோரி திறன் கொண்ட நிலக்கரியை வாங்கி அதை 6000 கிலோ கலோரி என்று கூறி தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அதானி விற்று உள்ளார். இதன் மூலம் டபுள் லாபத்தை அடைந்துள்ளார் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
நிலக்கரி தரத்தை குறைத்து அதானி மோசடியாக பம்பர் லாபம் பெற்றிருக்கலாம் என்று இந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஊழல் புகார் நீண்ட நாட்களாக வைக்கப்படும் நிலையில் முன்பே வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளை அதானி தரப்பு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications