Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானி VS கெயில்: எரிசக்தி துறையில் நடக்கும் மகா யுத்தம்.. ரூ.3000 கோடி முதலீட்டில் அந்த ஒரு கருவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சி குஜராத் மாநிலத்தின் முந்த்ரா பகுதியில் தொடங்க உள்ளது.. தொழிலதிபர் அதானியின் "அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ்" நிறுவனம், இதுவரை இந்தியா பார்த்திராத அளவிலான ஒரு பிரம்மாண்டமான காற்றாலை இறக்கையை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.. இந்த செய்திதான் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது...!!!

காற்றாலை மூலம் வரும் எரிசக்தியைப் பெருக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.. இந்த இறக்கையின் நீளம் மட்டும் 91.2 மீட்டர் இருக்கும் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..

Adani VS GAIL Energy War

கால்பந்து மைதானம்

அதாவது இது எந்த அளவுக்குப் பெரியது என்றால், ஒரு முழு கால்பந்து மைதானத்தின் நீளத்திற்கு சமமானது அல்லது ஒரு 30 மாடி கட்டிடத்தை விட உயரமானது என்று சொல்லலாம்.. இப்போதைக்கு முந்த்ரா ஆலையில் 80 மீட்டர் வரையிலான இறக்கைகளே தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய முயற்சி தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவின் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது..

இந்த ராட்சத காற்றாலை இறக்கைகள் சாதாரணமாக காற்று வீசும் இடங்களிலும் கூட மிக அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.. பொதுவாக பலத்த காற்று வீசும் மலைப் பிரதேசங்களில் மட்டுமே காற்றாலைகள் சிறப்பாக செயல்படும் என்ற நிலையை மாற்றி, சுமாரான காற்று வீசும் இடங்களிலும் மின் உற்பத்தியைப் பெருக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும்..

ராட்சத காற்றாலை

இதன் மூலம் இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தி திறன் வெகுவாக அதிகரிக்கும்.. தற்போது இந்தியா 55,000 மெகாவாட் மின் உற்பத்தியுடன் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.. அதானியின் இந்த 3,000 கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டம், இந்தியாவை முதலிடத்திற்குக் கொண்டு செல்ல உதவும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.. மேலும், இது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும்..

இந்தத் திட்டத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஒரு காற்றாலை மட்டும் சுமார் 5 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் வல்லமை கொண்டது..

முந்த்ரா ஆலை

முந்த்ரா ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை வரும் ஆண்டுகளில் 10 கிகாவாட் வரை உயர்த்த அதானி குழுமம் இலக்கு நிர்ணயித்துள்ளது.. இது ஒருபுறமிருக்க, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனமும் தனது பங்கிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் குதித்துள்ளது..

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 1,736 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய காற்றாலை மின் திட்டங்களை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.. 2035ம் ஆண்டுக்குள் கார்பன் புகையில்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு கெயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது..

அதானி Vs கெயில்

ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கெயில் நிறுவனம் காற்றாலைகளை செயல்படுத்தி வருகிறது.. இப்போது மகாராஷ்டிராவிலும் 178 மெகாவாட் திறனில் புதிய திட்டத்தைத் தொடங்க உள்ளது.. இதற்கான பணிகள் அடுத்த 24 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

அதானி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்புகளும், கெயில் நிறுவனத்தின் புதிய முதலீடுகளும் இணைந்து இந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதோடு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி செலவையும் பெருமளவு குறைக்கும்.. மொத்தத்தில், இந்தியாவின் இயற்கை எரிசக்தி பயணம் இனி ஒரு புதிய வேகத்தில் செல்லப் போகிறது என்பது மட்டும் உறுதி..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+