வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்குது.. தொகுதி வாரியாக கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்காக கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 5 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3 ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4 ஆம் கட்ட தேர்தல் 13 ஆம் தேதியும், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 20ஆம் தேதியும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.
7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி 57 லோக்சபா தொகுதிகளில் நடைபெறுகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிசிடிவி கண்காணிப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வரும் ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகளும் அதன் பிறகு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளன்று, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக இருந்து, பணிகளை மேற்கொள்வது இவர்களின் முதன்மையான பணியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்களான கயனேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் முன்னிலையில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து கடந்த 27ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில் அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள், இணைத்தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர். சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications