மெரீனா பீச் போகும் மக்களே நோட் பண்ணுங்க.. போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வசதிக்காக இன்று (டிசம்பர் 8) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாம், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலை, மருத்துவம், கல்வி, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய புறநகர் ரயில்கள் சேவை முக்கியப் பங்காற்றி வருகிறது.

குறைந்தபட்ச கட்டணம், வேகமான சேவை போன்ற காரணத்தால் புறநகர் ரயில் சேவையையே பொதுமக்கள் பலரும் தேர்வு செய்கின்றனர். ஒருநாளைக்கு சென்னை சென்னையின் புறநகர் ரயில் சேவையை சுமார் 25 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழித்தடத்தில் 15 முதல் 25 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயணிகள் தங்களது பயண திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இன்று (டிசம்பர் 8) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் டிசம்பர் 8 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், வரும் 8.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 05 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 05 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications