சென்னை ஏர்போர்ட் அருகே.. 3 ஏக்கரில் பிரம்மாண்டமாக வருது பார்க்கிங் வசதி.. மெட்ரோ நிர்வாகம் அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் தங்களின் வாகனத்தை நிறுத்த போதிய இட வசதி இல்லாமல் இருந்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், 3 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக புதிய பார்க்கிங் வசதி அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக மெட் ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் வசதி பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு தற்போது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சென்னையில் இப்போது இரண்டு ரூட்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர 3 ரூட்களில் இப்போது புதிதாக மெட்ரோ கட்டுமானம் பணி தொடங்கி நடந்து வருகிறது.

chennai metro rail parking

சென்னையில் விம்கோ நகர் - ஏர்போர்ட் வரையிலான வழித்தடம், சென்ட்ரல் - பரங்கிமலை வரையிலான வழித்தடம் என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் பீக் நேரங்களில் அலைமோதுகிறது. காலை மாலை நெரிசல் நேரத்தில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில்களில் சென்றால் நெரிசல் இன்றி விரைவாக செல்ல வேண்டிய பகுதிக்கு சென்று விடலாம் என்பதால் சொந்த வாகனங்கள் வைத்திருந்தாலும் மெட்ரோவில் செல்லவே விரும்புகிறார்கள். பெரும்பாலான வாகன ஓட்டிகள், வீட்டில் இருந்து இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் வந்துவிட்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க் செய்து விட்டு, ரயில்களில் தங்கள் பணி செய்யும் இடத்திற்கு செல்கிறார்கள். இதனால், நகரின் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் பகுதியும் நிரம்பி வழிகிறது.

சென்னை ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், முடிச்சூர், சித்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணிகள் அண்ணாசாலை, வட சென்னை, அண்ணா நகர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தையே பெரிதும் சார்ந்து இருக்கிறார்கள்.

இதில் பெரும்பாலான பயணிகள் தங்கள் பைக்குகள் மற்றும் கார்களை ஏர்போர்ட் மெட்ரோவில் நிறுத்திவிட்டு பிறகு திரும்பி வரும் போது எடுத்து செல்கிறார்கள். ஆனால், இங்கு தற்போது இருக்கும் பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லை. அங்கு 475 வாகனங்களை மட்டுமே நிறுத்துவதற்கு இடம் இருப்பதால் பார்க்கிங் பகுதியை விரிவுப்படுத்த வேண்டும் என்று பயணிகள் எதிர்பர்த்தனர்.

இந்த நிலையில், தான் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்லாவரத்தில் 3 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட பார்க்கிங் ஏரியா அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இங்கு 100 கார்களும் 1,500 இரு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும். பார்க்கிங் பகுதியில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 5-10 நிமிடங்கள் இடைவெளியில் இணைப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மாத இறுதியில் இந்த பார்க்கிங் வசதியை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங் வசதி திறக்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், ஏர்போட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படுவதால் சற்று சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பயணிகள் கூறுகிறார்கள். இணைப்பு பேருந்து அடிக்கடி இயக்கப்பட்டால் மட்டுமே இந்த பார்க்கிங் வசதியால் பயன் இருக்கும் என்பதும் பயணிகளின் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+