நாளை முகூர்த்த நாள்.. சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: நாளை முகூர்த்த தினம் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு வழக்கத்தை விட கூடுதலாக டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழக அரசின் பதிவுத்துறையும் விதிவிலக்கல்ல. தமிழக பதிவுத் துறை கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் எளிமையாக பத்திரப்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் தாங்கள் விரும்பும்நாளில், விரும்பும் நேரத்தில் பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டோக்கன் என்பது ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் மாறுபடும்.
ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் தினமும் 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப்பதிவு என்பது நடக்கும். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நல்ல நாளில் சொத்துகள் வாங்கினால் அதுபோன்ற வாய்ப்பு அதிகரித்து சொத்துகள் குவியும் என்று மக்கள் நம்புவது தான்.
இதனால் சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் சார்பில் பதிவுத்துறைக்கு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு சுபமுகூர்த்த தினகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன. மேலும் சுபமுகூர்த்த தினங்களில் அரசு விடுமுறை வந்தாலும் கூட அலுவலகத்தை செயல்பட வைக்கும் நிகழ்வுகளும் தமிழகத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 14ம் தேதியான நாளை முகூர்த்த தினமாக உள்ளது. இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு என்பது அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் வழக்கத்தை விட கூடுதல் டோக்கன்கள் வழங்க தமிழக பதிவுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. இதன்மூலம் அதிகமான மக்கள் பயன்பெற வாய்ப்புள்ளது.
அதன்படி நாளை முகூர்த்த தினத்தையொட்டி பதிவுத்துறையின் சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களின் நலன்கருதி வழக்கமாக வழங்கும் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications