பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ரயில்வே.. வைகை, பல்லவன் எக்ஸ்பிரசில் வந்த மாற்றம்
சென்னை: வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை - சென்னை மற்றும் சென்னை - காரைக்குடி இடையே இயக்கப்படும் ரயில்களில் வரும் மே மாதம் 11, 12 ஆம் தேதிகளில் இருந்து கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரயில் பயணத்தையே பலரும் விரும்புகிறார்கள். பஸ்களில் செல்வதை விட ரயில்களில் செல்ல அதிக பயணிகள் விரும்புவதால், சாதாரண நாட்களில் கூட ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களிலேயே ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் பண்டிகை நாட்களில் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருக்கும்.

2 ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
புக்கிங் செய்து செல்பவர்களை எடுத்துக்கொண்டால் இரண்டு மாதத்துக்கு முன்பே டிக்கெட் புக் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் புக்கிங் செய்வதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், முன்பதிவில்லா பெட்டியில் தான் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரு ரயிலில் முன்புறம் ஒரு பெட்டியும், கடைசியில் ஒரு பெட்டியும் என 2 முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு சில ரயில்களில் 3 பெட்டிகள் முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும்.
கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் சாதாரண நாட்களில் கூட இந்த பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூட்ட நெரிசலை குறைக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மதுரை - சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் காரைக்குடி - சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டியை இணைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
வரும் மே மாதம் முதல்
வரும் மே மாதம் 11 ஆம் தேதி முதல் இந்த வசதி அமல்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கோடைக்காலத்தில் பயணிகள் அதிகம்பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல இருக்கும் நிலையில், ரயில்வேயின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:-
* சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயிலில் (வண்டி எண்: 12605) மற்றும் மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயில்களில் (12636) வரும் மே மாதம் 11 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி (இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி) இணைக்கப்படும்.
ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைப்பு
* இதேபோன்று மறுமார்க்கமாக சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை விரைவு ரயில் (12635) மற்றும் காரைக்குடி - சென்னை எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் (12606) வரும் மே மாதம் 12 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி (இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி) இணைக்கப்படும். முன்பதிவில்லாத ரயில் பெட்டி இணைக்கப்படும் அதே நேரத்தில், அதற்கு பதிலாக இரண்டு ரயில்களிலும் தலா ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications