"ஓ மை காட்".. அதிமுக வேட்பாளருக்கு வந்த திடீர் சந்தேகம்.. வீடு வீடாக சென்று.. அலறி போன ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் தந்துள்ளார்
சென்னை: ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்துவிட்டது.. அதனால் வீடு வீடு சென்று இந்த காரியத்தை செய்துள்ளார்.. இதனால் தேனி மாவட்ட அதிமுகவுக்கு கெட்ட பெயரையே இந்த செயல் தேடி தந்து கொண்டிருக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில், இந்த முறை அதிமுக வேட்பாளராக களமிறங்கி உள்ளவர் லோகிராசன்..
திமுக வேட்பாளராக மகாராசன், அமமுக வேட்பாளராக ஜெயக்குமார் களமிறங்கி உள்ளனர்.. இவர்களை தவிர, மொத்தம் 20 வேட்பாளர்கள் இதே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

போட்டியாளர்கள்
ஏற்கனவே ஆளும் தரப்பு மீது அதிருப்திகள் நிறைந்துள்ள நிலையில், போட்டியாளர்களும் களத்தில் அதிகம் என்பதால், வாக்காளர்களை சிறப்பாக கவனிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அதிமுக வந்துள்ளது.. அதனால் ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடா பகிரங்கமாகவே நடத்தப்பட்டது.

வாக்காளர்கள்
ஆனால், ஓட்டுப் போடும் தினத்தன்று தங்களுக்கு பணம் எதுவும் வந்து சேரவில்லை என்று பலர் அதிமுக நிர்வாகிகளை மக்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.. ஆண்டிப்பட்டி முழுக்க இதே புலம்பலாக இருந்தது.. இதனால், கலங்கி போன அதிமுக வேட்பாளர் லோகிராசன், யாரையும் நம்பாமல் தானே நேரடியாக வந்து பணப்பட்டுவாடா செய்தார்..

திடீர் குழு
அத்துடன் இந்த விவகாரத்தை அவர் விடவில்லை.. தொகுதிக்குள் சரியாக பணம் ஏன் விநியோகிக்கவில்லை என்று மொத்த பொறுப்பாளர்களையும் திட்டி தீர்த்தார்.. அப்போதும் இந்த விவகாரத்தை அவர் விடவில்லை.. திடீரென ஒரு குழுவை ரெடி செய்து, ஒவ்வொரு தெருவுக்கும் அனுப்பினார்.. ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, பணம் வந்ததா? வாங்கிவிட்டீர்களா? யாரெல்லாம் வாங்கவில்லை என்று புள்ளிவிவரம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்..

ஷாக்
இதை கண்டு வாக்காளர்கள் முதல் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஷாக் ஆனார்கள்... இவ்வளவு காலம் பூடகமாக நடந்து கொண்டிருந்த விஷயம், இப்படி வெளிப்படையாகவே நடக்க ஆரம்பித்துவிட்டதே, எந்த வேட்பாளரும், லோகிராசன் போல டீம் அமைத்து, இப்படி ஒரு காரியத்தை செய்தது இல்லையே என்ற முணுமுணுப்பு தேனி மாவட்ட அதிமுகவில் எழுந்து வருகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications