அடித்துப் பிடித்து 7 தொகுதிகளை அள்ளிய பாமக.. போட்டியிடப் போகும் தொகுதிகள் இதுதானா?
அதிமுக-பாமக இடையே தொகுதி பங்கீடு பேசி முடிக்கப்பட்டு விட்டது.
Recommended Video

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் அதிமுக தரப்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அதிமுக- பாஜக தலைமையில் ஒரு அணியும், திமுக- காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது.
இதில் ஏற்கனவே அனைவரும் எதிர்பார்த்தபடியே பாமக அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் அதிமுக இன்று கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

சீட் ஒதுக்கீடு தாராளம்
இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் 4 தொகுதிகள் மட்டுமே பாமகவுக்கு ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வந்த நிலையில், ஒரேயடியாக 7 தொகுதிகளை அதிமுக வழங்கியுள்ளது. கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படுகிறது.

பாமக டிமாண்டு
ஏற்கனவே வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருப்பதாலேயே இந்த டிமாண்டை பாமக அதிக தொகுதிகளைக் கேட்டு வந்தது. பாமக, திமுக பக்கம் போய்விடாமல் இருக்கவுமே 4 சீட்டுக்கு பதில் 7 என தாராளத்தை காட்டி மடக்கி விட்டது அதிமுக. அத்துடன் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கவும் அதிமுக ஒப்புக் கொண்டுள்ளது.

7 தொகுதிகள்
இப்போது இந்த 7-.ல் எந்த எந்த தொகுதிகள் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது. தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. 7 தொகுதிகளின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 40 தொகுதிகளிலும் அதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெறும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இழுபறி நீடிப்பு
ஆனால் ராமதாஸ் கேட்கும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் விஜயகாந்த்துக்கும் செல்வாக்கு இருக்கிறது. இதனால் அந்த தொகுதிகளை யாருக்கு தருவது என்பது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. தேமுதிகவுடனும் பேசி இதற்கு தீர்வு காண்பார்கள்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications