அதிமுக முடிவு நிலையானது இல்லை.. பாஜக சொல்லி நடக்கும் நாடகம்தான்.. சந்தேகம் கிளப்பும் முத்தரசன்
சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்த நிலையில், இது ஒரு தந்திரமாக இருக்கலாம் என்றும் பாஜக சொல்லியே கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை எங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம் என்று அதிமுக அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து தனியார் செய்தி தொலைககட்சிக்கு பேட்டி அளித்த் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், அதிமுக முடிவு நிலையானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முத்தரசன் கூறியதாவது:- அதிமுக முடிவை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். நிலையானது அல்ல. அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி தனித்த முறையில் சந்தித்து பேசினார். வெளிப்படையாக இந்த சந்திப்பு குறித்து இரு தரப்பில் இருந்துமே அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதற்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி போயிருக்கிறார்கள்.
பாஜக தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஜேபி நட்டாவையும் சந்தித்து உள்ளார்கள். ஜேபி நட்டா , நாம சந்தித்தைதையே வெளியே சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இரண்டு அரசியல் கட்சி தலைவர்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விதான் எழுகிறது. இது ஏதோ ஒரு யுக்தி... அவ்வளவுதான்.. தந்திரம்.. இந்த தந்திரம் இவர்களால் (அதிமுக) உருவாக்கப்பட்ட தந்திரமா அல்லது பாஜகவின் ஆலோசனையின் எடுக்கப்பட்ட முடிவா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
பாஜக வேண்டாம் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் விருப்பமாக தொடக்கத்தில் இருந்து உள்ளது. ஜெயலலிதா இனி எக்காரணத்தை கொண்டும் பாஜகவோடு அரசியல் உறவு கொள்ளாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்கள். அதற்கு மாறாகத்தான் எடப்பாடி இந்த முடிவை எடுத்தார். தொண்டர்களை பொறுத்தவரை பாஜகவுடன் சேரக்கூடாது என்பதுதான் 100 க்கு 100 சதவீதம் விருப்பம். எடப்பாடி பழனிசாமிக்கு மனப்பூர்வமாக விருப்பமா அல்லது சொல்லி வைத்து செய்யப்படுகிறதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications