நோட் பண்ணுங்க.. தலைநகரில் 33 இடங்கள்..திமுகவின் வேதனையும், எங்கள் சாதனையும்.. மாஜி மணிகண்டன் சுளீர்

மாஜி அமைச்சர் மணிகண்டன் திமுக அரசை விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கள் ஆட்சியின் சாதனையை சொல்லியும், திமுக ஆட்சியின் வேதனைகளை சொல்லியும் வாக்கு கேட்க போகிறோம்.. எல்லா பகுதியிலும் அபாரமாக வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடக்க போகிறது...

அதற்காக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் களப்பணியாற்றி வருகின்றன.. பிரச்சாரங்களையும் கையில் எடுத்து வருகின்றன.. அதிமுக இந்த முறை தனித்து போட்டியிடுகிறது.

 மணிகண்டன் பேட்டி

மணிகண்டன் பேட்டி

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் தேர்தல் விறுவிறு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இங்குள்ள நகராட்சியில் 33 வார்டுகளில் 17 வார்டுகள் பெண்களுக்கும் 15 வார்டுகள் பொது வார்டுகளாகவும் 1வார்டு எஸ்சி பிரிவினருக்கும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியிருந்தது..

நகராட்சி

நகராட்சி

இந்த 33 வார்டுகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை பெறுவதற்கான முனைப்பை காட்டி வருகிறது.. இந்நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவதையடுத்து, ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமையில் தாக்கல் செய்தனர்.. இதற்கு பிறகு மாஜி அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:

மணிகண்டன்

மணிகண்டன்

ராமநாதபுரத்தில் உள்ள 33 வார்டுகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.. ஏனென்று கேட்டால், எங்களுடைய அதிமுக ஆட்சியில் இந்த மாவட்ட மக்களுக்கு அனைத்து வகையான திட்டங்களையும் செய்து தந்துள்ளோம்.. நான் அமைச்சராக இருந்தபோதும்சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம்.. பல வருடமாக முடிக்கப்படாமல் இருந்த திட்டங்களை நாங்கள்தான் செயல்படுத்தினோம்.. மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி உள்ளோம்... சாலைகளை சீரமைத்துள்ளோம்..

 மணிகண்டன் உறுதி

மணிகண்டன் உறுதி

அவ்வளவு ஏன், 30 ஆண்டு காலமாக செய்யாததை எல்லாம் எங்கள் ஆட்சியில்தான் செய்து தந்துள்ளோம்.. எல்லா ஏரிகளையும் தூர்வாரி மொத்த நீர்நிலைகளையும் நிரப்பி வைத்துள்ளோம்.. ராமநாதபுரத்தில் இப்பவெல்லாம் தண்ணீர் பிரச்சனையே கிடையாது.. ஆனால், திமுக ஆட்சி 8 மாசத்துலேயே எவ்வளவு மோசமான ஆட்சி என்று தெரிந்துவிட்டது. திமுகவின் வேதனைகளையும், எங்கள் ஆட்சியின் சாதனைகளையும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க போகிறோம்... நிச்சயம் 33 வார்டுகளிலும் வெற்றி பெறுவோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+