அதிமுககாரங்களுக்கு இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கு.. எண்ணெய்யை ஊற்றும் சிஆர் சரஸ்வதி!
Recommended Video
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ள நிலையில் அதிமுகவினருக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்துள்ளதாக அமமுகவின் துணை கொள்கை பரப்புச்செயலாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேச்சு கட்சிக்குள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும் என்றும், இரண்டு தலைமைகள் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியவில்லை என்றார்.
அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்ற அவர்,தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

குண்டை போட்ட ராஜன் செல்லப்பா
மேலும் 9 எம்எல்ஏக்களை ரவீந்திரநாத்துடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது யார்? என்று கேட்டும் குண்டை தூக்கி போட்டார் ராஜன் செல்லப்பா. இதனால் அதிமுக கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஆள் இல்லை
இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான சிஆர் சரஸ்வதி ராஜன் செல்லப்பா பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, அதிமுகவை வழிநடத்த கட்சிக்குள் ஆள் இல்லை.

அதிமுகவில் ஆள் இல்லை
இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான சிஆர் சரஸ்வதி ராஜன் செல்லப்பா பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, அதிமுகவை வழிநடத்த கட்சிக்குள் ஆள் இல்லை.

இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கு
அதிமுகவினருக்கு இப்போதுதான் ஞானோதயம் பிறந்துள்ளது. பாஜகவின் நிழலில் இருந்து வரும் அதிமுகவினர் இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
பொதுக்குழுவைக்கூட்டினாலும் அதிமுகவுக்கு திறமையான ஆளுமையை தேர்வு செய்ய முடியாது.

பாஜக தயவில் ஆட்சி
ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு சொந்த திறமை எதுவும் இல்லை. அவர்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. பாஜகவின் தயவில் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.

சட்டத்தை மாற்றினார்கள்
ஜெயலலிதா பெற்று தந்த 37 தொகுதிகளையும் பலி கொடுத்துவிட்டார்கள். பாஜக தயவில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இல்லாத ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினார்கள். தங்களின் இஷ்டத்திற்கு சட்டத்தை மாற்றினார்கள்.

மக்களின் ஆதரவு இல்லை
இப்போது உண்மை வெளியே வருகிறது. மக்களின் ஆதரவு இல்லாததால் எல்லோரும் உண்மையை சொல்ல ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அமமுகவின் செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications