சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மாஸ்டர்" எடப்பாடியார்.. ஒரே கல்லில் 2 "தேங்காய்".. தெறிக்கவிட்ட முதல்வர்.. 4 லட்சம் ஓட்டு கன்பர்ம்

கொங்கு மண்டல மலையாளிகள் வாக்குகளை அள்ள எடப்பாடி அரசு தீவிரம் காட்டி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: வரப்போகிற தேர்தலில், கொங்கு மண்டலத்தின் மொத்த ஓட்டுக்களையும் அள்ள அதிமுக தரப்பு தீவிரமான நடவடிக்கையில் இறங்கிவிட்டது.. அந்த வகையில் ஒரு மாபெரும் அதிரடி காரியத்தையும் எடப்பாடி தரப்பு கமுக்கமாக செய்து முடித்துள்ளது!

ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் தொகுதி கோவை ஆகும்.. இது ஒரு தொழில் நகரம்.. கிட்டத்தட்ட சென்னையை போலதான்.. முக்கிய இங்கு பஞ்சாலைகள், இன்ஜினீயரிங், நகைத்தொழில் உட்பட, இரும்புப் பட்டறைகள், மெக்கானிக் ஷாப்புகள் என அனைத்து வகையான தொழில்கள் நிறைந்து கிடக்கும்.

அதனால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு தொழில் தேடி வருவார்கள். அந்த வகையில், கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே வந்து குடியேறியவர்கள் உட்பட பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவரும் ஆக்கிரமித்து உள்ளனர். இதில், மலையாளிகள் அதிக அளவு இருக்கிறார்கள்.

வேட்டியை மடிச்சு கட்டி வயலில் நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி... இது வேற லெவல் அரசியல் வேட்டியை மடிச்சு கட்டி வயலில் நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி... இது வேற லெவல் அரசியல்

மலையாளிகள்

மலையாளிகள்

கோவையில் மட்டும் மலையாளிகளின் எண்ணிக்கை நிச்சயம் 1.5 லட்சத்தைத் தாண்டும்... திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்கள் என ஒட்டுமொத்த கொங்கு மண்டலமும் சேர்த்து 4 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் இருக்கும்.. இந்த மலையாளிகள் ஈழுவா மற்றும் தீயா சமுதாயத்தினர் ஆவார்.. இந்த 4 லட்சம் ஓட்டுக்களை சலட்டு போல அள்ளவே எடப்பாடியார் தரப்பு கொக்கி போட்டு வந்தது.

 சமுதாய மக்கள்

சமுதாய மக்கள்

அந்த வகையில், இந்த 2 சமுதாயத்தினரும், பிற்படுத்தப்பட்ட பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார்கள்.. தற்போது, இந்த கோரிக்கையை அதிமுக தரப்பு நிறைவேற்றி தந்துள்ளதாம்.. இதன்மூலம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில், இந்த ஈழுவா, தீயா சமுதாயத்துக்கும் இனி முன்னுரிமை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

 4 லட்சம் ஓட்டு

4 லட்சம் ஓட்டு

இதன் காரணமாகவே எடப்பாடி அரசுக்கு இவங்களது ஓட்டுமொத்த ஓட்டுகளும் சுளையா கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.. ஏற்கனவே 11 பேர் வழிகாட்டு குழுவில் தலித் யாருமே இல்லை, தலித் ஓட்டுகளை அதிமுக புறக்கணிக்கிறதா? வெறும் கொங்கு, முக்குலத்தோர், வன்னியர் ஓட்டுக்கள் மட்டும் போதும் என்று முடிவெடுத்துவிட்டதா? என்று பல்வேறு அதிருப்திகள் இந்த 3 நாட்களாக எழுந்து வரும் நிலையில், ஆளும் தரப்பு இப்படி ஒரு காரியத்தை கச்சிதமாக செய்து முடித்துள்ளது.

 முடிசூடா மன்னன்

முடிசூடா மன்னன்

ஒரு பக்கம் தலித்துகளுக்கு ஆதரவு தரும் கட்சி என்ற பெயர், மற்றொரு பக்கம் 4 லட்சம் ஓட்டுக்கள் என ஒரே கல்லில் 2 மாங்காயை சத்தமில்லாமல் சத்தமில்லாமல் அடித்துள்ளார் எடப்பாடியார்.. கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே முடிசூடா மன்னனாக உயர்ந்துள்ள முதல்வர், தற்போது கோவை மலையாளிகள் மத்தியிலும் உயர்ந்து காணப்படுகிறார்!

English summary
Eezhava and Theeya caste votes confirmed for AIADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X