சென்னை பட்ஜெட் கூட்டம் தொடங்கிய உடனேயே.. சரசரவென வெளியே வந்த அதிமுக கவுன்சிலர்கள்..ஓ இதுதான் காரணமா
சென்னை: சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video
கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாமல் இருந்தது. இதனால் மாநகராட்சி ஆணையர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்தனர்.
தலைநகர் சென்னையிலும் அதே நிலையே நிலவி வந்தது. பட்ஜெட்டை மாநகராட்சி ஆணையர்கள் தாக்கல் செய்ததால் புதிய திட்டங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல் இருந்தது,

சென்னை
கடந்த பிப். மாதம் தான் பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக தலைமையிலான கூட்டணியே கைப்பற்றியது. அதன்படி சென்னையில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் திமுக வென்ற நிலையில், சென்னையின் 49ஆவது மேயராக ஆர் பிரியா பதவியேற்றார்.

பட்ஜெட்
இந்தச் சூழலில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மேயர் ஆர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக கடைசியில் 2016 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மேயர் சைதை துரைசாமி முன்னிலையில் பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சந்தானம் தாக்கல் செய்தார்.

அதிமுக
இன்று காலை 10 மணியளவில் பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது அதிமுகவினர் பேச அனுமதி கேட்ட நிலையில், அதற்கு அனுமதி வழங்க மேயர் பிரியா மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை புறக்கணித்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்துப் பேச அனுமதி தராததால் வெளிநடப்பு செய்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

வெளிநடப்பு
சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் ஏழை மற்றும் நடத்தர வர்க்கத்தினரே அதிகம் வசிப்பதாகவும் இப்பகுதியில் சொத்து வரி 100% உயர்த்தப்பட்டுள்ளது ஏழைகளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதிமுகவினர் தெரிவித்தனர். இது குறித்துப் பேச அனுமதி கோரிய போது, மேயர் அனுமதி தரவில்லை என்றும் இதனால் வெளிநடப்பு செய்ததாகவும் அதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications