அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ்! அசர மறுக்கும் எடப்பாடி! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! அதிமுகவில் நடப்பது என்ன
சென்னை: அதிமுக உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், இன்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்ததும் அதை எடப்பாடி நிராகரித்ததும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Recommended Video
தமிழக அரசியலில் இப்போது ஹாட் டாபிக் ஆக உள்ளது அதிமுக உட்கட்சி விவகாரம் தான். ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் கூட முடிந்ததாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், பல்வேறு குழப்பங்களுக்குப் பின்னர் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் சென்றது. இப்போது இரு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தீர்ப்பு
கடந்த ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பை அளித்தது. அதாவது ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என்றும் அதிமுகவில் ஜூலை 23க்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் மூலம் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஒருங்கிணைப்பாளர்களாகத் தொடரும் சூழல் உருவானது.

ஓபிஎஸ்
நேற்றைய தினமே செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸிடம் எடப்பாடி உடன் இணைந்து பணியாற்றத் தயாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஜூன் 23 முன்னர் கட்சியில் பொறுப்பில் இருந்த அனைவருடனும் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் இனி மேல் அவர் தரப்பு, இவர் தரப்பு என்றெல்லாம் இல்லை ஒருங்கிணைந்த அதிமுகதான் என்றும் தெரிவித்திருந்தார்.

அழைப்பு
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இன்னும் கூட வெளிப்படையாகவே இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். ஒன்றுபட்ட அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்றும் அதிமுக பிளவுபட்ட காலங்களிலேயே திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது என்றார். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது என்று குறிப்பிட்ட அவர், நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் என்றும் அதிமுகவினர் விருப்பப்படி நானும் எடப்பாடியும் ஒன்றாகச் செயல்படுவோம் என்றார்.

அன்பு சகோதரர்
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை பல முறை தனது பேட்டியில் அன்பு சகோதரர் என்றே ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி இரட்டை தலைமை என்பதில் பிரச்சினையில்லை என்று குறிப்பிட்ட அவர். கூட்டுத் தலைமையாகச் செயல்படுவோம் என்றார். ஓபிஎஸ் இப்படி பேட்டி அளித்துக் கொண்டு இருக்கும் போதே, மறுபுறம் எடப்பாடி தரப்பு உயர் நீதிமன்ற தீர்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீடு
நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், இன்று எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது இந்தத் தீர்ப்பு வந்த உடனேயே எடப்பாடி தரப்பினர் மேல்முறையீட்டிற்கு செல்வார்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், சரியாக ஓபிஎஸ் இணைப்பிற்குத் தயார் எனப் பேட்டி அளிக்கும் போது, மேல்முறையீடு தொடர்பான செய்தியை வெளியிட்டு தனது நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக விளக்கி உள்ளார் எடப்பாடி!

வாய்ப்பில்லை
அதேபோல ஓபிஎஸ் பேட்டி அளித்த கொஞ்ச நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி, ஓபிஎஸ் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்தார். மேலும், ஓபிஎஸ் திமுக உடன் தொடர்பில் இருப்பதாகும் அதிமுக கட்சி விரோத செயல்பாடுகளில் ஓபிஎஸ் தொடர்ந்து ஈடுபடுவதாலேயே தொண்டர்கள் ஒற்றை தலைமையை விரும்பியதாகத் தெரிவித்தார். இதனால் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார்.

என்ன ஆகும்
ஒருபுறம் ஓபிஎஸ் அழைப்பு விடுக்கும் நிலையில், எடப்பாடி அதை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். ஓபிஎஸ் அழைப்பைத் தொடர்ந்து பிரச்சினை முடியும் எனத் தொண்டர்கள் நினைத்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்பது எடப்பாடியின் பேட்டி மூலம் தெளிவாகித் தெரிகிறது. ஒற்றை தலைமை என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளதால் இந்தப் பிரச்சினை இப்போது முடிய வாய்ப்பில்லை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications