Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பறந்த கடிதம்.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி..ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு தொடர்பான ஆலோசனைக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை அதிமுக தலைமை அலுவலகம் பெற மறுத்து 2 முறை திருப்பி அனுப்பிய நிலையில் கடித்ததில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டது ஏன்? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக சம்பவம் குறித்து சத்ய பிரதா சாஹூ இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இருக்கும் விஷயம் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதற்கு ஓ பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கண்டுக்கொள்ளாமல் ஒற்றை தலைமையை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டியது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்க திட்டமிடப்பட்டது.

 ஒற்றை தலைமை விவகாரம்

ஒற்றை தலைமை விவகாரம்

அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதோடு, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது நிலுவையில் உள்ள நிலையில் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் நாளைய விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கடிதங்களில் குறிப்பிடப்படும் பதவிகள்

கடிதங்களில் குறிப்பிடப்படும் பதவிகள்

இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இடையே அடிக்கடி வார்த்தை போல் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என அவரது தரப்பும், அது செல்லாது என ஓ பன்னீர் செல்வம் தரப்பும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பாஜக மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து வரும் கடிதங்களில் குறிப்பிடும் பதவிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழக தேர்தல் ஆணையம் கடிதம்

தமிழக தேர்தல் ஆணையம் கடிதம்

இந்நிலையில் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்குமாறு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டதால், அவரது தரப்பினர் உற்சாகத்தில் இருந்தனர். மத்திய அரசு சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிவந்த நிலையில் திடீரென்று ட்விஸ்ட் ஏற்பட்டது. புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் ரிமோட் ஓட்டுப்பதிவு முறையை அமல்படுத்த உள்ளது. இதுதொடர்பான மாநில தேர்தல் ஆணையம் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு சில தினங்களுக்கு முன்பு அதிமுகவுக்கு கடிதம் அனுப்பினார்.

 திருப்பி அனுப்பப்பட்ட கடிதம்

திருப்பி அனுப்பப்பட்ட கடிதம்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இங்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பொறுப்பு இல்லை என்பதை கூறும் வகையில் கடிதத்தை திருப்பி அனுப்பினர். மீண்டும் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதேபோல் பதவிகளை மாற்றாமல் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதமும் 2வது முறையாக திருப்பி அனுப்பப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்


இந்நிலையில் தான் அதிமுக விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இ-மெயிலில் அனுப்பிய கடிதத்தில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த கடிதத்தில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான ஆலோசனைக்கு அதிமுகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது பற்றியும், அதனை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியது பற்றியும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி விளக்கம்

தேர்தல் அதிகாரி விளக்கம்

முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது'' என அவர் தெரிவித்து இருந்த நிலையில் அதிமுக விவகாரம் தொடர்பாக தற்போது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சம்பவம் தொடர்பாக இ-மெயிலில் கடிதம் அனுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+