இந்த திமுக மேல கோபம்தான் வருது.. நாசமா போகும் குடும்பங்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு வந்த ஆவேசம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு திமுக அரசு தடை கொண்டு வர வேண்டும் என்று அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பெருங்குடியில் வசித்துவந்தவர் மணிகண்டன்.. இவர் ஒரு வங்கி அதிகாரி.. இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து போலீசார் விசாரணையை துவக்கியபோது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.. தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார் மணிகண்டன்.

 சூதாட்டம்

சூதாட்டம்

கடந்த 2 மாத காலமாக அவர் வேலைக்குச் செல்லவில்லை என்பது முதல்கட்டமாக தெரியவந்தது. இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்துள்ளார் மணிகண்டன்.. அதாவது சூதாட்டம் ஆடியுள்ளார்.. நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ.1 கோடி வரை அந்த ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்...

 கொலை - தற்கொலை

கொலை - தற்கொலை

ஒருகட்டத்தில் கடன் தொல்லை கழுத்தை நெறுக்கவும், கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது... இந்த சூழலில் மணிகண்டன் மனைவியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்து கொன்று விட்டு, 2 குழந்தைகளையும் தலையணையால் அழுத்தி கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில், அதிமுக எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் வங்கி ஊழியர் திரு.மணிகண்டன் அவர்கள் தனது குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும், இந்த திமுக அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

 வலியுறுத்தல்

வலியுறுத்தல்

அம்மா அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்திருந்தது, நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் இத்தகைய சூதாட்டத்தை அரசு சட்டம் இயற்றி தடை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது.. உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+