சூடு பிடிக்கும் தேர்தல் களம்... பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக... 3-வது முறையாக வெற்றிபெற வியூகம்..!
சென்னை: அதிமுக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதால் தமிழக தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.
தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்றுக்கொண்டனர்.

முறைப்படி துவக்கம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக தலைமை இன்று முறைப்படி தொடங்கி வைத்திருக்கிறது. இதற்கான பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

விழா மேடை
விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்த முதலமைச்சரிடம் மலர் தட்டு கொண்டு செல்லப்பட்டது. என்ன நினைத்தாரோ அவர் முதலில் நீங்க மரியாதை செலுத்துங்க என அருகில் இருந்த ஓ.பி.எஸ்.சை அழைக்க அவர் முதல் மரியாதை செலுத்தினார். பின்னர் அவரைத் தொடர்ந்து இ.பி.எஸ். எம்.ஜி.ஆர்., ஜெ. படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

50-க்கும் மேற்பட்ட இருக்கைகள்
கட்சி நிகழ்ச்சி என்பதால் அந்த புரோட்டகால்படி ஓ.பி.எஸ்.க்கு இ.பி.எஸ். முன்னுரிமை அளித்தார் எனத் தெரிகிறது. இதனிடையே பிரச்சார மேடையில் 50-க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். இது சற்று வித்தியாசமான நிகழ்வாக பார்க்கப்பட்டது.

மூத்த நிர்வாகிகள் பேச்சு
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியின் செயல்திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும், 100 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி செய்யும் என அவர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி போன்றோரும் அதிமுகவை வெற்றிபெற வைப்பதற்கான பிரச்சார உத்திகளை நிர்வாகிகள் மத்தியில் பேசினர்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications